சிக்கன் ஃப்ரான்க்ஸ் பாஸ்தா செய்வது எப்படி? #Pasta





சிக்கன் ஃப்ரான்க்ஸ் பாஸ்தா செய்வது எப்படி? #Pasta

இந்த உலகில் சிக்கன் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. ஏனென்றால், சிக்கனை வைத்து சமைக்கும் அனைத்து உணவுகளுக்கும் நாம் அடிமைகள். நமது வீட்டில் சிக்கன் சமைக்கும் நாளில் மட்டும், நாம் சப்புக்கொட்டி வயிறு புடைக்க சாப்பிடுவது உண்டு. 
சிக்கன் ஃப்ரான்க்ஸ் பாஸ்தா செய்வது
நம்மில் பலருக்கு தோன்றும், தினமும் சிக்கன் சாப்பிடுவது பாதுகாப்பானதா என்று?… நம்மில் பலர் தினமும் அசைவ உணவு சாப்பிட்டால் அது உடலுக்கு கேடு என நினைப்போம். ஆனால், அந்த நம்பிக்கை 50% தவறானது. 

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில், சிக்கனை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆபத்தானது தான். 

கோழிக்கறியில் நிறைந்துள்ள புரதம் ஆஸ்டியோ போரோசிஸ் (osteoporosis) எனப்படும் எலும்பு தொடர்பான பிரச்சனையை தடுக்கிறது. அது மட்டும் அல்ல, சிக்கன் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. 
திருஷ்டி கழிக்கும் கல் உப்பு அறிவியல் உண்மை !
சிக்கனில் உள்ள கோலின் மற்றும் வைட்டமின் B12 நினைவாற்றல் மேம்பாட்டிற்கு உதவுகிறது. அதிகளவு கோலின் உட்கொள்வபர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இரத்த சோகை, இரும்புச்சத்து குறைப்பாடு உள்ளவர்கள் அடிக்கடி உடல் சோர்வு பிரச்சனையை சந்திப்பார்கள். அடிக்கடி சிக்கன் உட்கொள்வது உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை அளிக்கிறது. 

அத்துடன், உடல் சோர்வை நீக்கி நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கிறது.இந்த பாஸ்தா ரெசிப்பியை Shama's Fast Food Event Pasta மற்றும் Snehithi's Party Snacks Event அனுப்புகிறேன்.
தேவையான பொருட்கள் :

பாஸ்தா (மக்ரோனி) - 200 கிராம்

சிக்கன் ஃப்ரான்க்ஸ் - 4 பீஸ்

எண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 1

கொடைமிளகாய் - 1

தக்காளி - சிறியது 1

டொமட்டோ சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்

சோயா சாஸ்- 1 -2 டீஸ்பூன்

ஆயிஸ்டர் சாஸ் - 1 -2 டீஸ்பூன்

ஹாட் சாஸ் - 1-2 டீஸ்பூன்

சிக்கன் சூப் கியூப்- 1

பெப்பர் பவுடர் - 1 டீஸ்பூன்
காய்கறிகளில் சத்து குறைவு இப்படியும் ஏற்படுகிறது !
செய்முறை :

பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு தேவைக்கு உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீர் வடித்து ஆற வைக்கவும். சாஸ் வகைகளை ரெடியாக எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், நறுக்கிய வெங்காயம், கொடை மிளகாய் சேர்த்து வதக்கவும், சிறிது வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.

சிக்கன் சூப் கியுப் பொடித்து போடவும்.உப்பு தேவை யில்லை, நன்கு வதக்கவும், பின்பு அத்துடன் வேக வைத்த சிக்கன் ப்ரான்க்ஸ் கட் செய்து போடவும்.
( சிக்கன் ஃப்ரான்க்ஸ் கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து வடித்து கட் செய்து கொள்ளவும்.) மேலே குறிப்பிட்ட அனைத்து சாஸ் வகையும் அவரவர் டேஸ்ட்டுக்கு சேர்க்கவும். பிரட்டி விடவும்.

வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி பெப்பர் பவுடர் சேர்க்கவும். நன்கு கலந்து விடவும். சுவையான ஜூஸி சிக்கன் ப்ரான்க்ஸ் பாஸ்தா ரெடி.
குறிப்பு :

விருப்பப் பட்டால் மொசரல்லா சீஸ் தூவி பரிமாறவும். எப்பவாவது இப்படி செய்து சாப்பிடலாம். ப்லைன் வெஜ் பாஸ்தா இதே முறையில் செய்யலாம்.

பள்ளி செல்லும் குழந்தை களுக்கு எப்பவும், இட்லி, பூரி,சப்பாத்தி பரோட்டான்னு கொடுக்கும் பொழுது மாறுதலுக்கு இப்படி பாஸ்தா செய்து கொடுக்கலாம்.
Tags: