வயிறு பிரச்சனைகளை குணமாக்கும் ஆயுர்வேத சூப் செய்வது எப்படி?





வயிறு பிரச்சனைகளை குணமாக்கும் ஆயுர்வேத சூப் செய்வது எப்படி?

0
கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து. வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. 
வயிறு பிரச்சனைகளை குணமாக்கும் ஆயுர்வேத சூப் செய்வது எப்படி?
நமது உடலின் மேற்பரப்பான தோலில் சில நுண்கிருமி தொற்றால் படை, சொறி, அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. 

கற்பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, நன்கு கசக்கி அந்த இலைகளின் துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும். 

மேலும் சுவாச பிரச்சனைகள் மழை மற்றும் குளிர்காலங்களில் வயது பேதமின்றி அனைவருக்கும் சளி, ஜலதோஷம் ஏற்பட்டு மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டைக்கட்டு போன்றவை ஏற்படுகின்றது. 

கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து, அந்த இலையின் சில துளிகளை மூக்கில் விட்டு உறிஞ்ச மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்கும். 
அந்த இல்லை சொட்டுகளை தொண்டையில் படுமாறு அருந்த தொண்டைக்கட்டு, வறட்டு இருமல், சளி தொந்தரவுகள் ஆகியவை நீங்கும்.

கற்பூரவள்ளி இலையை அவியல் செய்து சாறு பிழிந்து அல்லது இலைச்சாற்றை சட்டியிலிட்டு சுண்டச் செய்து, கப நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம். 
கற்பூரவள்ளியோடு தேங்காய், பருப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து சட்னியாகவும் செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் :

கற்பூரவல்லி இலை - 15,

ஓமம் - 2 டீஸ்பூன்,

சீரகம் - 2 டீஸ்பூன்,

தனியா - 2 டீஸ்பூன்,

மிளகு - 4 எண்ணிக்கை,

சுக்குத்தூள் - ஒரு சிட்டிகை (தேவைப் பட்டால்),

இஞ்சி - 1 துண்டு,

பூண்டு - 4 பல்,

சோம்பு - சிறிது (தேவைப் பட்டால்),

உப்பு - தேவைக்கு,

பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை (தேவைப் பட்டால்),

வெற்றிலை - 4,

நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை
வயிறு பிரச்சனைகளை குணமாக்கும் ஆயுர்வேத சூப் செய்வது எப்படி?
கற்பூரவல்லி இலையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கற்பூரவல்லி இலை, வெற்றிலை சேர்த்து வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.

மற்றொரு கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும் ஓமம், சீரகம், தனியா, சோம்பு, மிளகு, பூண்டு, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி, வதக்கிய கற்பூரவல்லி இலை, வெற்றிலை யுடன் சேர்த்து 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
சூப் நன்கு கொதித்து 1 கப்பாக சுண்டியதும் வடித்து பரிமாறவும். சத்தான ஓமம் கற்பூரவல்லி இலை சூப் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)