டபாஸ்கோ வெண்ணெய்யுடன் சால்மன் மீன் வறுவல் செய்வது எப்படி?





டபாஸ்கோ வெண்ணெய்யுடன் சால்மன் மீன் வறுவல் செய்வது எப்படி?

0
பல ஆயிரம் வருடங்களாக நம்முடைய உணவில் ஒன்றாக இருக்கிற மீன்களில் புரதம், கால்சியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பாஸ்பரஸ் என மனிதர்களுக்குத் தேவையான ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன. 
சால்மன் மீன் வறுவல் ரெசிபி
தவிர, மட்டன், சிக்கன்போல ஒரே விலை என்றில்லாமல் ஒவ்வொரு வகை மீனும் ஒவ்வொரு விலை என்பதால், எல்லாப் பொருளாதார நிலையில் இருப்பவர்களாலும் மீன்களை வாங்க முடியும். 

மீன் குழம்புக்காகவே வார இறுதி நாள்களை எதிர்பார்க்கிற மீன் பிரியர்கள் நம்மிடையே ஏராளம். வெண்ணெய்யை உட்கொள்வதால், இதில் நிறைந்துள்ள கொழுப்புக்களால் விரைவில் கொழுகொழுவென்று குண்டாகி விடுவோம் 

என்ற பயம் உள்ளது. ஆனால் உண்மையை சொல்ல  வேண்டுமானால், அக்காலத்தில் நம் முன்னோர்கள் வெண்ணெய்யைத் தான் பெரும்பாலும் பயன்படுத்தினார்கள். 

ஆகவே வெண்ணெய் ஆரோக்கியமற்றது என்று கூற முடியாது. அதே நேரம் அளவாக எடுத்து கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை. வெண்ணெயில் கலோரிகள் அதிகம் உள்ளது. 
ஆகவே இதனை அளவாக சாப்பிட்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். வெண்ணெய்யில் லெசிதின் என்னும் பொருள் உள்ளது. வெண்ணெய் சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பான். 

எனவே இவற்றை உட்கொள்வதால், அது உடலில் ஏற்பட்டுள்ள சிறு நோய்த்தொற்றுகளை  தடுக்கும். சால்மன் மீனை டாபஸ்கோ பட்டரில் வறுத்து, உருளைக் கிழங்கு சாலட்டுடன் அல்லது உருளைக் கிழங்கு மசியலுடன் பறிமாறலாம்.

தேவையான பொருட்கள்

டபாஸ்கோ பட்டருக்கு தேவையானவை

50 கிராம் வெண்ணெய்

1/2 தேக்கரண்டி டாபாஸ்கோ

1/2 தேக்கரண்டி சைவ்ஸ் , நறுக்கப்பட்ட

உப்பு தேவைக்கேற்ப,

சால்மன் மீனிற்கு

150-200 கிராம் சால்மன் மீன் துண்டுகள்

ஆலீவ் ஆயில்

சுவைக்க உப்பு தேவைக்கேற்ப

எப்படி செய்வது :
இரட்டை கொதி முறையில் வெண்ணெய்யை உருக்கி அதனுடன் டபாஸ்கோ சாஸ், சைவ்ஸ் மற்றும் உப்பு சேர்க்கவும். வெண்ணெய்யை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி கட்டியாகும் வரை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

அடி கணமான பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து சூடாக்கவும். அதில் எண்ணெய்யை ஊற்றவும். அதில் மீனின் தோல் பக்கத்தை முதலில் வைத்து 3 நிமிடம் வேக வைக்கவும்.
மாரடைப்புக்கு செயல்முறை மூலம் சிகிச்சை !
திருப்பி போட்டு 2 நிமிடம் வேக வைக்கவும். மீனை தட்டில் வைத்து அதன் மேல் செய்து வைத்த டாபஸ்கோ பட்டரை வைக்கவும். உருளைக்கிழங்கு சாலட் அல்லது உருளைக்கிழங்கு மசியலுடன் பறிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)