முட்டையில்லா டூட்டி ஃப்ரூட்டி கேக் செய்வது எப்படி?





முட்டையில்லா டூட்டி ஃப்ரூட்டி கேக் செய்வது எப்படி?

1 minute read
0
டூட்டி ஃப்ரூட்டி என்பது சிறிய சதுர வடிவிலான இனிப்பு சுவையில் உள்ள ஒரு தின்பண்டமாகும். இது, ரொட்டி, பிஸ்கட், குக்கீகள் மற்றும் பன்களில் போன்ற தின்பண்டகளில் அலங்காரத்திற் காகவும் சுவைக்காகவும் சேர்க்கப் படுகிறது.  
முட்டையில்லா டூட்டி ஃப்ரூட்டி கேக் செய்வது எப்படி?
டுட்டி ஃப்ரூட்டி பச்சை பப்பாளியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. டுட்டி ஃப்ரூட்டியில் மிகவும் பிரபலமானது டுட்டி ஃப்ரூட்டி ஐஸ்கிரீம் ஆகும். இதனை சிறுவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். 
இது பல வண்ணங்களில் காட்சி யளிப்பதால் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறது. டுட்டி ஃப்ரூட்டி ஒரு சிறந்த ஆற்றல் மூலமாகும். இது உடலிற்கு உடனடி புத்துணர்ச்சியை அளிக்கிறது. 

எனவே, உங்கள் அன்றாட உணவில் சிறிதளவு டுட்டி ஃப்ரூட்டியினை சேர்த்து கொள்ளலாம். எனவே, உடல் ஆற்றலின்றி சோர்வாக இருக்கும்ப ட்சத்தில் டுட்டி ஃப்ரூட்டி நல்ல பலனளிக்கும். 

டுட்டி ஃப்ரூட்டியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது, உணவுகளை சுலபாக செரிமானம் செய்ய உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது. 
எனவே, மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல தீர்வாகும். 
சரி இனி டூட்டி பழம் பயன்படுத்தி டேஸ்டியான முட்டையில்லா டுட்டி ப்ரூட்டி கேக் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

என்னென்ன தேவை?

மைதா - 150 கிராம்

சர்க்கரை - 100 கிராம்

எண்ணெய் - 125 மில்லி

பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி

பேக்கிங் சோடா - ½ தேக்கரண்டி

வெண்ணிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி

டூட்டி பழம் - 200 கிராம்

கன்டென்ஸ்ட் மில்க் - 60 மில்லி

பால் - 120 மிலி
மூளையை பாதிக்கும் விஷயம்  !
எப்படி செய்வது?
முட்டையில்லா டுட்டி ப்ரூட்டி கேக்
முதலில் டுட்டி ப்ரூட்டி மீது சிறிதளவு மைதா மாவு தூவி நன்றாக கலந்து வைக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து கலந்து தனியாக வைக்கவும்.
திருமணமாகி சில நாளில் கணவரை விட்டு லெஸ்பிய னுடன் சென்ற இளம் பெண் !
இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய், சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும். அதனுடன் கன்டென்ஸ்ட் மில்க்,பால் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இப்பொது மாவு கலவையை இதனுடன் சேர்த்து கலக்கவும். டுட்டி ப்ரூட்டியை யும் இதனுடன் சேர்த்து, பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றி பொன் நிறமாகும் வரை பேக் செய்யவும். பின் வெட்டி பரிமாறவும்.
Tags:
Random Posts Blogger Widget

Post a Comment

0Comments

Post a Comment (0)