கோதுமை ரவை புலாவ் செய்வது | Wheat Rava Pulau Recipe !





கோதுமை ரவை புலாவ் செய்வது | Wheat Rava Pulau Recipe !

0
தேவையானவை:

கோதுமை ரவை - ஒரு கப்,

பெரிய வெங்காயம், கேரட், குடமிளகாய் - தலா ஒன்று,

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்,

ஊற வைத்த பச்சைப் பட்டாணி - 3 டேபிள் ஸ்பூன்,

நறுக்கிய மல்லித்தழை - ஒரு டேபிள் ஸ்பூன்,

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க:

சோம்பு, கசகசா (இரண்டும் சேர்ந்து) - ஒரு டீஸ்பூன்,

தேங்காய்த் துருவல் - 4 டேபி ள்ஸ்பூன்,

தக்காளி - ஒன்று.
செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ள வற்றை விழுதாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், கேரட் சேர்த்து வதக்கி... 

கோதுமை ரவையையும் அதனுடன் சேர்த்து வதக்கி, இறுதியில் இஞ்சி - பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
இதில் ஒன்றரை கப் நீர் விட்டு, உப்பு, அரைத்து வைத்த விழுது சேர்த்து, நன்றாகக் கலக்கி குக்கரை மூடிவிடவும். 

ஆவி வந்ததும் குக்கரைத் திறந்து பச்சைப் பட்டாணி சேர்த்து மூடி, 'வெயிட்’ போட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும். மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)