மைக்ரோவேவ் ஓவன் கிரில் சிக்கன் செய்வது எப்படி?





மைக்ரோவேவ் ஓவன் கிரில் சிக்கன் செய்வது எப்படி?

0
சரியான முறையில் சிக்கனை உட்கொண்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காது. எனவே அதை நீங்கள் எப்படி உட்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே நன்மை தீமை இருக்கிறது. 
மைக்ரோவேவ் ஓவன் கிரில் சிக்கன்
நீங்கள் வறுத்த சிக்கனை வழக்கமாக சாப்பிடுபவர் எனில், உங்கள் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

உண்மையில், அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வெள்ளை இறைச்சி சிவப்பு இறைச்சியைப் போலவே கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. 

உங்கள் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க, வேகவைத்த, சுடப்பட்ட அல்லது கிரில் செய்யப்பட்ட சிக்கனை உட்கொள்வது சிறந்தது. சிக்கன் உடலில் அதிக சூட்டை கிளப்பும் உணவாக கருதப்படுகிறது. 
எனவே தொடர்ச்சியாக சாப்பிடுவது உங்கள் உடலின் ஒட்டுமொத்த வெப்பநிலையை அதிகரிக்கலாம். குறிப்பாக கோடை காலத்தில் சிக்கன் அதிக ஹீட்டை உண்டாக்கும். 

அப்படி உடல் சூட்டை வெளியிடுவதாக உணர்ந்தால் சில நாட்கள் சிக்கனை முற்றிலும் தவிர்த்தல் நல்லது. சிக்கனை தொடர்ந்து சாப்பிடுவதன் மற்றொரு பக்க விளைவு எடை அதிகரிப்பு. 

சிக்கன் பிரியாணி, பட்டர் சிக்கன், ஃப்ரைட் சிக்கன் மற்றும் பல சுவைகளில் அதை சாப்பிட்டாலும் எடையை அதிகரிக்கும். 

எனவே உடல் எடையில் அக்கறை செலுத்துபவர் எனில் சிக்கனை எப்போதாவது எடுத்துக் கொள்வது நல்லது. ஆனால் வழக்கமாக சாப்பிடுவது நிச்சயமாக எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ (பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)

மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்

மிளகு தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிதளவு

சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

தயிர் - 1/2 கப்

எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

முட்டை - 1

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - சிறிதளவு

செய்முறை:
சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். மசாலா பொருட்கள் அனைத்தையும் சிக்கனோடு சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
வௌவால் மீன் வறுவல் செய்முறை  !
மைக்ரோவேவ் ஓவனை 200 டிகிரி சூடு பண்ணவும். இப்போது சிக்கனுடன் எண்ணெய் சிறிது சேர்த்து மைக்ரோவேவ் ஓவனில் வைக்ககூடிய உயரமான ட்ரேயில் வைத்து 300 டிகிரி சூட்டில் 20 நிமிடம் வைக்கவும்.

பிறகு அதை வெளியே எடுத்து சிக்கனை திருப்பி போட்டு மீண்டும் 20, நிமிடம் வைக்கவும். மிகவும் சுவையான கிரில் சிக்கன் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)