தேவையானவை:

பேரீச்சம்பழம் – 100 கிராம்,

மிளகாய்த் தூள் – 1 டேபிள் ஸ்பூன்,

உப்பு – 2 டீஸ்பூன்,

எலுமிச்சம் பழச்சாறு – கால் கப்.

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன். வறுத்துப் பொடிக்க:

வெந்தயம் – கால் டீஸ்பூன்,

பெருங்காயம் – அரை டீஸ்பூன்.
பள்ளத்தில் கவிழ இருந்த பேருந்தை யானை காப்பாற்றியதா?
செய்முறை:
பேரீச்சம்பழத் தொக்கு செய்வது

பேரீச்சம் பழத்தைக் கொட்டை நீக்கி, மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். 

வெந்தயத்தை வெறும் கடாயில் வறுத்துக் கொண்டு, எடுக்கும் போது பெருங்காய த்தைப் புரட்டி எடுத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். 
எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, நறுக்கிய பேரீச்சம் பழத்தைச் சேருங்கள். குறைந்த தீயில் மூன்று நிமிடங்கள் வதக்குங்கள். 

பின்னர் எலுமிச்சம் பழச்சாறு, மிளகாய்த் தூள், வெந்தயம் – பெருங்காயத் தூள் சேர்த்து, மூன்று நிமிடங்கள் நன்கு கிளறி இறக்குங்கள்.