கொத்தமல்லி இலையை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். 
சுவையான கொத்தமல்லி விதை சட்னி செய்வது எப்படி?
இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் (Herbal) தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும். கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். 
குழந்தையின் எலும்புகள், பற்கள் உறுதி அடையும். கொத்தமல்லி இலையில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்த சோகை (Anemia) வருவதற்கான வாய்ப்புக் குறைகிறது. 

இரவில் நன்றாக தூக்கம் வர கொத்த மல்லியை சேர்த்துக் கொண்டால் நல்ல பலனை தரும். 

சரி இனி கொத்தமல்லி கொண்டு சுவையான கொத்தமல்லி விதை சட்னி செய்வது எப்படி? என்று பார்ப்போம். 
தேவையான பொருட்கள்

கொத்த மல்லி விதை – 100 கிராம்

மிளகாய் வற்றல் – 3 எண்ணம்

புளி – நெல்லிக்காய் அளவு

கல் உப்பு – தேவையான அளவு

தாளிக்க

நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்

மிளகாய் வற்றல் – ஒரு எண்ணம்

கடுகு – ¼ ஸ்பூன்

வெந்தயம் – 10 எண்ணம்
செய்முறை :
சுவையான கொத்தமல்லி விதை சட்னி செய்வது எப்படி?
முதலில் கொத்த மல்லி விதை, மிளகாய் வற்றலை காம்பு நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் கொத்தமல்லி விதை, மிளகாய் வற்றலை சேர்த்து வறுக்கவும்.

கொத்த மல்லி விதையானது வாசனை வந்து வெடித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும். புளியை சிறிது எண்ணெய் சேர்த்து வறுத்து கொள்ளவும். கறிவேப்பிலை யை அலசி உருவிக் கொள்ளவும்.
வறுத்த கொத்தமல்லி விதை, மிளகாய் வற்றல் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். 

பின் அதனுடன் ஊற வைத்த புளி, தேவையான அளவு கல் உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஆகிய வற்றைச் சேர்த்து நன்கு அரைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, 

வெந்தயம், மிளகாய் வற்றல் போட்டு தாளித்து அரைத்த கொத்த மல்லி விதைக் கலவையுடன் சேர்க்கவும்.
சுவையான கொத்த மல்லி விதை சட்னி தயார். இதனை இட்லி, தோசை, ஆப்பம்,  சாத வகைகள் ஆகியவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.