சுவையான ஆரோக்கியமான சிலோன் பரோட்டா செய்வது எப்படி?





சுவையான ஆரோக்கியமான சிலோன் பரோட்டா செய்வது எப்படி?

0
இன்றைக்கு பரோட்டா என்பது நிறைய மக்களுக்கு பிடித்த உணவாக உள்ளது.  மைதா மாவைச் சுத்திகரிக்க பென்சாயில் பெராக்ஸைடு (Benzoyl Peroxide) எனும் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. 
சுவையான ஆரோக்கியமான சிலோன் பரோட்டா செய்வது எப்படி?
இது உடலுக்குத் தீங்கான ஒன்றாகும். அது மட்டுமல்ல, நீரிழிவு (சர்க்கரை) நோய் வர வாய்ப்புகள் அதிகம். இவற்றை சில ஐரோப்பிய நாடுகளும், சீனாவும், இங்கிலாந்தும் தடை செய்திருக்கின்றன. 
பரோட்டாவின் மூலப்பொருட்கள் சில விதங்களில் உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கக் கூடியது என சில கருத்துக்களும் முன்வைக்கப் படுகின்றன.

கடைகளில் தயார் செய்யும் பரோட்டாவை சாப்பிடாமல், வீட்டில்  பரோட்டாவை தயார் செய்து உண்ணுவது ஆரோக்கியமானது. சுவையான ஆரோக்கியமான சிலோன் பரோட்டா செய்வது எப்படி? என்று  பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - ஒரு கப்,

மைதா மாவு - ஒரு கப்,

நெய் - 1 டேபிள் ஸ்பூன்,

ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை,

உப்பு - அரை டீஸ்பூன்,

எண்ணெய் - தேவையான அளவு.

பூரணத்துக்கு:

காய்கறி கலவை - கால் கப்,

பன்னீர் - 200 கிராம்,

பெரிய வெங்காயம் - 2,

பச்சை மிளகாய் - 4,

கொத்த மல்லித்தழை - சிறிதளவு,

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,

பூண்டு - 6 பல்,

மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,

பட்டை, லவங்கம், ஏலக்காய் தூள் பொடித்தது - அரை டீஸ்பூன்,

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
சுவையான ஆரோக்கியமான சிலோன் பரோட்டா செய்வது எப்படி?
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, நெய், ஆப்ப சோடா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பன்னீரை துருவிக் கொள்ளுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்த மல்லித்தழை, பூண்டு ஆகிய வற்றை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். 

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், மிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். 
வெங்காயம் நன்றாக வதங்கியதும் பன்னீர், கொத்த மல்லித்தழை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பொடித்த மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

பிசைந்து வைத்த மாவில் இருந்து சிறிது மாவெடுத்து கிண்ணம் போல் செய்து அதனுள் நிறைய பூரணத்தை நிரப்புங்கள். பின்னர் மாவு தொட்டு முக்கோண வடிவத்தில் திரட்டி வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த பரோட்டாவை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். 

சுவையான சத்தான சிலோன் பரோட்டா ரெடி.

குறிப்பு :.

விருப்பமுள்ளவர்கள் கடலை எண்ணெய்க்குப் பதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து பரோட்டா தயார் செய்யலாம். 
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)