பாகற்காய் ஸ்டஃப்டு மசாலா செய்வது | Bitter Gourd Suffed Spices Recipe !





பாகற்காய் ஸ்டஃப்டு மசாலா செய்வது | Bitter Gourd Suffed Spices Recipe !

0
தேவையான பொருட்கள் :

பாகற்காய் - 5

நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்

மிளகாய்தூள் - அரை ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

மாங்காய் பவுடர் - அரை ஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

பெருங்காய தூள் - கால் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

சோம்பு - அரை ஸ்பூன்

நறுக்கிய மாங்காய் - சிறிதளவு

கடலை எண்ணெய் - தேவைக்கு

செய்முறை :
பாகற்காய் ஸ்டஃப்டு மசாலா செய்வது

பாகற்காயின் மேல் தோலை லேசாக சீவிக் கொள்ளவும். பின்னர் இரண்டாக வெட்டி நடுப்பகுதியில் உப்பு கலந்து அரை மணி நேரம் வெயிலில் உலர வைக்கவும். பின்னர் அவைகளை நன்றாக கழுவிக் கொள்ளவும்.
வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மாங்காய் பவுடர், சீரகம், பெருங்காயத் தூள், சோம்பு, மாங்காய் துண்டுகள் ஆகிய வற்றை ஒன்றாக கலந்து பாகற் காய்களின் உள்ளே வைக்கவும். அவை கீழே விழாத அளவுக்கு நூலினால் கட்டிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பாகற்காயை கலவையுடன் போட்டு பொன்னிற மாகும் வரை கிளறி எடுத்து சுவைக்கலாம். சூப்பரான பாகற்காய் மசாலா ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)