அசத்தலான ஸ்பைசி பொட்டேட்டோ கறி செய்வது எப்படி?





அசத்தலான ஸ்பைசி பொட்டேட்டோ கறி செய்வது எப்படி?

0
அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது. 
அசத்தலான ஸ்பைசி பொட்டேட்டோ கறி செய்வது எப்படி?
உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும். 

உருளைக்கிழங்கில் வைட்டமின் சி மற்றும் கரோட்டின் சத்துக்கள் அதிகம் இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கின்றன. 

இந்த வைட்டமின் சி சத்து, குழந்தைகளிடம் அதிகம் காணப்படும் ஸ்கர்வி நோய் ஏற்படாமல் தடுக்கிறது. உருளைக்கிழங்கில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. 
நார்ச்சத்து ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து 

இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர உருளைக்கிழங்கில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது. 

இதயம் ஆரோக்கியமாக இயங்கவும், இதய நோய்கள் வராமல் தடுக்கவும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை உருளைக்கிழங்குகள் உணவுகளை சாப்பிடுவது நன்மையை ஏற்படுத்தும். 

சரி இனி உருளைக்கிழங்கினை கொண்டு அசத்தலான ஸ்பைஸி பொட்டேட்டோ கறி செய்வது எப்படி?  என்று பார்ப்போம்.
தேவையானவை : 

உருளைக்கிழங்கு – 4 (வேக வைத்து, தோல் நீக்கி துண்டுக ளாக்கவும்) 

பூண்டு – 6 பல் 

ஏலக்காய், பட்டை, கிராம்பு – தலா ஒன்று  

சோம்பு – சிறிதளவு 

வெங்காயம், தக்காளி – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) 

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் 

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்  

மல்லித்தூள் (தனியாத்தூள்) – கால் டீஸ்பூன் 

கறிவேப்பிலை, கொத்த மல்லித்தழை – சிறிதளவு 

எண்ணெய், உப்பு – தேவையான அளவு. 
செய்முறை: 
அசத்தலான ஸ்பைசி பொட்டேட்டோ கறி செய்வது எப்படி?
வாணலியில் எண்ணெய் விட்டு ஏலக்காய், பட்டை, கிராம்பு, சோம்பு தாளிக்கவும். அதனுடன் பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். 

பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். 
அதனுடன் உருளைக்கிழங்கு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும். பிறகு கறிவேப்பிலை, கொத்த மல்லித்தழை சேர்த்து இறக்கவும். 

இதை சப்பாத்தி யுடன் பரிமாறலாம். சாம்பார் சாதம், ரசம் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம். 

குறிப்பு: 

உருளை கிழங்கு, உடல் இயக்கத்துக்கு அவசியமான இரும்புச் சத்தைக் கொண்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)