ருசியான ரெட் வாத்து கறி செய்வது எப்படி?





ருசியான ரெட் வாத்து கறி செய்வது எப்படி?

0
உலகெங்கிலும் உள்ள ஏராளமான நபர்கள் வாத்து இறைச்சியை ஒரு சுவையான உணவாக அனுபவிக்கிறார்கள். 
ரெட் வாத்து கறி செய்வது
வாத்து இறைச்சியின் கொழுப்பில் உள்ள பாஸ்போலிபிட் என்ற வேதிப்பொருள், குறிப்பிடத்தக்க இறைச்சி வாசம் வருவதற்குக் காரணமாக அமைகிறது. 

வாத்து இறைச்சியில் இரும்புச் சத்தும், ஹீம் எனப்படும் வண்ண ஊக்கியும் அதிகளவில் உள்ளதால் இவ்வகை இறைச்சி மற்ற கோழி இறைச்சியை காட்டிலும் வண்ணம் மிகுந்ததாகக் காணப்படுகிறது. 

கர்ப்ப காலத்தில் உங்கள் புரத உட்கொள்ளலை அதிகரிக்க வாத்து இறைச்சி உதவுகிறது. 

சீரான, சத்தான உணவைக் கொண்டிருக்க உங்களுக்கு உதவ தேவையான அனைத்து வகையான அமினோ அமிலங்கள் உட்பட ஏராளமான புரதங்களை வாத்துக்கறி உங்களுக்கு வழங்குகிறது. 
சரி இனி வாத்து கறி பயன்படுத்தி ருசியான ரெட் வாத்து கறி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானவை :
ரெட் கறி பேஸ்ட் - 4 சிட்டிகை

தேங்காய்ப் பால் - 4 கப்

வாத்துக்கறி துண்டுகள் - 500 கிராம்

சிகப்பு மிளகாய் - 3

பேபி தக்காளி - 8

லிச்சி அல்லது டின்களில் விற்கப்படும் லிச்சி - அரை கப்

நார்த்தங்காய் இலை - 4

ஃபிஷ் ஸாஸ் (Fish Sauce) - 2 மேஜைக் கரண்டி

பனங்கற்கண்டு (Palm Sugar) - 1 தேக்கரண்டி

துளசி இலை - 4

உப்பு - 2 சிட்டிகை

இதயம் நல்லெண்ணெய் - 3 மேஜைக் கரண்டி
காய்ச்சல் வந்தால் முதலுதவி செய்வது எப்படி?
செய்முறை :

வாணலியில் 2 மேஜைக் கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ரெட் கறி பேஸ்ட் போட்டு கிளறி, கறித்துண்டு களைப் போட்டு சிவக்க வதக்கி, எடுத்து தனியே வைக்கவும். 

வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் 1 கப் தேங்காய்ப் பால் ஊற்றி, நன்றாக கொதிக்க விடவும்.

எண்ணெய் மிதக்க ஆரம்பித்ததும் கறித்துண்டு களைப் போட்டு 1 நிமிடம் கொதித்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி சூடேற்றவும். மீதமுள்ள தேங்காய்ப் பாலை ஊற்றவும். 
கொதித்ததும் சிறிதளவு தண்ணீர், பேபி தக்காளிகள், லிச்சி துண்டுகள், நார்த்தங்காய் இலை, ஃபிஷ் ஸாஸ், பனங்கற்கண்டு இவற்றைப் போட்டு கலந்து விடவும்.
ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப் பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும். உப்பு, இனிப்பு சரிசமமாக இருப்பது போல சரி பார்த்துக் கொள்ளவும். 

பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து, துளசி இலை மற்றும் இரண்டாகக் கீறிய சிகப்பு மிளகாய்கள் வைத்து அலங்கரித்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)