குறைந்த கலோரி உள்ள 5 சாண்ட்விச் !

குறைந்த கலோரி உள்ள 5 சாண்ட்விச் !

0
சாண்ட்விச் மிகப் பிரபலமான ஸ்நாக்ஸ் வகைகளில் ஒன்று. எளிதாக சில நிமிடங்களிலே செய்ய முடிகிற உணவு வகை என்பதால் பலரும் இதையே செய்யது சாப்பிடுகின்றனர். 
சாண்ட்விச்
ஆரோக்கிய மான டயட் பட்டியலில் நிச்சயமாக பிரட்டுக்கு இடமில்லை. பிராசஸ் செய்யப்பட்ட மாவில் செய்யப்படும் பிரட் கூடுதலாக கலோரி களையே அதிகப் படுத்துகிறது.

கடைகளில் சாண்ட்விச் வாங்கும் போது அதிகளவு உப்பு, சர்க்கரை மற்றும் ட்ரான்ஸ் ஃபேட் ஆகியவை உள்ளது. சாண்ட்விச்சில் தடவப்படும் பொருட்களில் தான் இவை அதிகம் உள்ளது. 

குறைந்த கலோரிகள் கொண்ட டயட்டுக்கேற்ற சாண்ட்விச் களை வீட்டிலே தயாரிக்கலாம்.

கடைகளில் வாங்கியதை பிரட்டில் தடவி சாப்பிடுவதை தவிர்த்து வீட்டிலே ஆரோக்கிய மானதை செய்து சாப்பிட முடியும். ஆரோக்கிய மான சாண்ட்விச்சில் பயன்படுத்தக் கூடிய சிலவற்றை பார்க்கலாம்.

1. ஹமஸ்
ஹமஸ்
கொண்டைக் கடலை, எள் மற்றும் ஆலிவ் ஆயில் கலந்து தயாரிக்கப் படுகிறது. ஹமஸ்ஸில் புரதச் சத்து மற்றும் நல்ல கொழுப்பு சத்து ஆகியவை உள்ளது. 

ஹமஸ்ஸுடன் வெள்ளரிக் காய், தக்காளி ஆகிய காய்கறிகள் வைத்து சாப்பிடலாம்.

2. மசித்த அவகேடோ
மசித்த அவகேடோ
வித்தியாசமான ஃப்ரூட் வகைகளில் ஒன்று எத்தனை விதமான ஸ்பைஸஸ் போட்டாலும் அதை அழகாக எடுத்து சுவையூட்டக் கூடியது. 

இதை இனிப்பு மற்றும் காரம் இரண்டு வகையான சாண்ட்விச்சி லும் பயன் படுத்தலாம்.

3. ரிகோட்டா சீஸ்
ரிகோட்டா சீஸ்
ஆரோக்கிய மான சீஸ் வகைகளில் ரிகோட்டாவும் ஒன்று. இதனுடன் கீரை வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

4. ஜாம்
ஜாம்
கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே சுவையான ஜாம்மை தயாரிக்க லாம். உங்களுக்கு பிடித்த பெர்ரி பழங்களை மசித்து சுகர் அல்லது 

தேன் கலந்து மைக்ரோ ஓவனில் 5 நிமிடம் லோ ஹீட்டில் வைத்தால் ஜாம் தயார். ஆரோக்கிய மான ஜாமை எளிதில் தயாரிக்க முடியும் 

5. பிநட் பட்டர் 
பிநட் பட்டர்
சாண்ட்விச் என்றால் பலருக்கும் நினைவுக்கு வருவது பீநட் பட்டர் தான். நிலக்கடலை மற்றும் பாதாம் பருப்பை வீட்டிலே அரைத்து எளிதாக இதை தயாரிக்கலாம். 

இதனுடன் வாழைப்பழம், மற்றும் தேன் சேர்த்து சாண்ட்விச் செய்து சாப்பிடலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)