சூப்பரான விரால் மீன் மஞ்சூரியன் செய்வது எப்படி?





சூப்பரான விரால் மீன் மஞ்சூரியன் செய்வது எப்படி?

0
பொதுவாக மீன்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒரு உணவு பொருளாகும். 
சூப்பரான விரால் மீன் மஞ்சூரியன் செய்வது எப்படி?
பல ஆயிரம் வருடங்களாக நம்முடைய உணவில் ஒன்றாக இருக்கிற மீன்களில் புரதம், கால்சியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பாஸ்பரஸ் என மனிதர்களுக்குத் தேவையான ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன. 

தவிர, மட்டன், சிக்கன் போல ஒரே விலை என்றில்லாமல் ஒவ்வொரு வகை மீனும் ஒவ்வொரு விலை என்பதால், எல்லாப் பொருளாதார நிலையில் இருப்பவர்களாலும் மீன்களை வாங்க முடியும். 

மீன் குழம்புக்காகவே வார இறுதி நாள்களை எதிர்பார்க்கிற மீன் பிரியர்கள் நம்மிடையே ஏராளம். மீன்கள் எப்போதுமே நல்லது தான் என்றாலும் விரால் மீனுக்கு ஒரு தனிசிறப்பு உண்டு.

இந்த மீனை அசைவ பிரியர்கள் வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள். அனைத்து அசைவ உணவுகளைவிட, கடல் உணவுகளில் எப்போதுமே சத்துக்கள் அதிகம். 

காரணம், சாச்சுரேட் கொழுப்பு இந்த மீன்களில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காது. மூளைக்கு மிகச்சிறந்த உணவாக மீன் திகழ்கிறது. மனித ஆயுளையும் கூட்டுகிறது. 
கண்பார்வை குறைபாடு முதல் தைராய்டு பிரச்சனை வரை தீர்வதற்கு மீன்கள் நல்ல மருந்தாகவும் பயன்படுகின்றன. 
மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது. 

நரம்புத் தளர்ச்சி நோயும் நீங்குகிறது. மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

என்னென்ன தேவை?

சோள மாவு, மைதா - தலா 25 கிராம்,

முட்டை - 1,

மீன் - 1/2 கிலோ,

கொத்த மல்லி - சிறிது,

எண்ணெய், உப்பு - தேவைக்கு,

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2,

பூண்டு - 6 பல்,

இஞ்சி - 1 துண்டு,

பச்சை மிளகாய் - 5,

சோயா சாஸ், தக்காளி சாஸ், வெங்காயத் தாள் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?
சூப்பரான விரால் மீன் மஞ்சூரியன் செய்வது எப்படி?
சோளமாவு, மைதா, முட்டை, உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து அதில் மீனை போட்டு கலந்து சூடான எண்ெணயில் பொரித் தெடுத்துக் கொள்ளவும். 

கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் வதக்கி, சோயா சாஸ், தக்காளி சாஸ், மீன் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். 
சிக்கனுடன் எலுமிச்சை.. எதற்காக தெரியுமா?
கொத்தமல்லி, வெங்காயத் தாள் போட்டு சூடாக பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)