சிக்கன் பிரைட் ரைஸ் செய்வது எப்படி? / How to Make Chicken Fried Rice !





சிக்கன் பிரைட் ரைஸ் செய்வது எப்படி? / How to Make Chicken Fried Rice !

0
தேவையான பொருட்கள்:

பாஸ்மதி ரைஸ் – 1/2 கிலோ

சிக்கன் – 1/2 கிலோ

வெங்காயம் – 2

வெங்காயத் தாள் – 4 பொடியாக நறுக்கியது

மிளகாய் பேஸ்ட் – 2 ஸ்பூன்
கறி மசாலா – 1 ஸ்பூன்

தக்காளி விழுது – 1 ஸ்பூன்

சீரக தூள், சர்க்கரை – 1/2 ஸ்பூன்

அஜினோ மோட்டோ – சிறிதளவு

மிளகுத் தூள் – 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு – தேவையான அளவு

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

இஞ்சி, பூண்டு விழுது – தேவையான அளவு 

செய்முறை:
சிக்கன் பிரைட் ரைஸ்
பாஸ்மதி அரிசியை முக்கால் பாகம் வேக வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கிளறி ஆற வைக்கவும். சிக்கனை சிக்கன் 65 செய்வது போல் செய்து கொள்ள வேண்டும். பிறகு அவற்றை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். 
மிளகாய் விழுது தயார் செய்ய அவற்றை சுடு தண்ணீரில் போட்டு ஊற வைத்து சிறிது வினிகர் சேர்த்து அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும். 

பின்னர் உப்பு, சர்க்கரை, அஜினோ மோட்டோ, எலுமிச்சை சாறு சேர்க்கவும். மேலும் சிக்கன் பொடியாக நறுக்கியதை சேர்க்கவும். 

கடைசியாக சாதம், மிளகுத் தூள், தக்காளி சாஸ், சீரகத் தூள், கறி மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக கொத்தமல்லி, வெங்காயத் தாளை தூவி இறக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)