கொள்ளு போண்டா செய்முறை / Gram Ponda Recipe !





கொள்ளு போண்டா செய்முறை / Gram Ponda Recipe !

0
தேவையானவை: 

கொள்ளு - ஒரு டேபிள் ஸ்பூன், 

பொட்டுக் கடலை - 2 டீஸ்பூன், 

வேர்க் கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன், 

பாசிப்பருப்பு - 2 டீஸ்பூன், 

எள்ளு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், 

தேங்காய் பால் அல்லது பால் - தேவையான அளவு, 

நறுக்கிய வெங்காயம் - ஒரு டேபிள் ஸ்பூன், 

பச்சை மிளகாய் - 2, 

எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப. 

செய்முறை: 
கொள்ளு போண்டா செய்முறை

கொள்ளை வாசனை வரும் வரை வறுத்து, அதனுடன் பாசிப் பருப்பையும் சேர்த்து மேலும் வறுக்கவும். பிறகு இதனுடன் பொட்டுக் கடலையை யும், வேர்க் கடலையை யும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் 
இதில் எள்ளு, சீரகம், உப்பு, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்துப் பிசிறவும். 

பிறகு தேங்காய் பாலையோ, பாலையோ சேர்த்து, போண்டா போடும் பக்குவத்தில் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து மாவை போண்டாக் களாகப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)