ருசியான பிரெட் வெஜிடபிள் கட்லெட் செய்வது எப்படி?





ருசியான பிரெட் வெஜிடபிள் கட்லெட் செய்வது எப்படி?

0
பிரெட். சமைக்க நேரமின்றி ஓடுபவர்கள், உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பவர்கள் எனப் பலருக்கும் பிரெட் மட்டுமே எளிதான உணவு. 
பிரெட் வெஜிடபிள் கட்லெட்
பிரெட்டில் கோதுமை பிரெட், குளூட்டன் ஃப்ரீ பிரெட் என நிறைய வகைகள் இருக்கின்றன. அளவு மற்றும் சுவையில் மட்டுமன்றி, ஊட்டச்சத்து வகைகளிலும் இவை ஒன்றுக்கொன்று மாறுபடும். 

பிரெட் சாப்பிடுபவர்களில் பலரும், அதில் நிறைய ஊட்டச்சத்துகள் இருப்பதாக நினைக்கின்றனர். உண்மையில் ஒரு பொருள் சுத்திகரிக்கப் பட்டதா, இல்லையா என்பதைப் பொறுத்தே அதன் ஊட்டச்சத்து அளவுகள் நிர்ணயிக்கப்படும். 

சுத்திகரிக்கப்படாத கோதுமை மாவில் தயாரிக்கப்படும் பிரெட்டில் கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்துகள், வைட்டமின்கள், கனிமங்கள் என அனைத்தும் நிரம்பியிருக்கும். 
அதுவே சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவிலிருந்து தயாரிக்கப்படும் பிரெட்டாக இருந்தால், அதில் வெறும் கார்போ ஹைட்ரேட் மட்டுமே இருக்கும். 

கார்போ ஹைட்ரேட், உடலின் உள்ளே செல்லும் போது, அது சர்க்கரைச் சத்தாக மாறும். இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் போவதுடன் மலச்சிக்கல் ஏற்படலாம். 

உப்புச் சத்தும் அதிகரிக்கும். தொடர்ந்து பிரெட் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும். சரி இனி பிரெட் வெஜிடபிள் பயன்படுத்தி ருசியான பிரெட் வெஜிடபிள் கட்லெட் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையானவை:

பிரெட் துண்டுகள் - 10,

கேரட், உருளைக் கிழங்கு - தலா 2,

குடமிளகாய் - 1,

கொத்தமல்லி - சிறிதளவு,

பச்சை மிளகாய் - 1,

எண்ணெய் - கால் டீஸ்பூன்,

நெய் - 6 டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
உருளைக் கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து மசிக்கவும். பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். குட மிளகாயைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். 

குடமிளகாயை யும், கேரட்டையும் எண்ணெயில் லேசாக வதக்கவும். இதனுடன் உருளைக் கிழங்கு, பிரெட் தூள், நறுக்கிய கொத்த மல்லி, நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறு கட்லெட் வடிவத்தில் தட்டிக் கொள்ளவும். 
தோசைக்கல் (அ) நான் ஸ்டிக் தவாவில் போட்டு நெய் தடவி சுட்டெடுக்கவும். சில்சாஸ் இதற்கு சூப்பர் காம்பினேஷன்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)