குன்றிமணியின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?





குன்றிமணியின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?

0
பழங்காலங்களிந்தே குன்றிமணியை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அந்த காலத்தில் தங்கத்தை எடைபோட வேண்டுமானால், குன்றிமணிகளை வைத்துதான் எடை போடுவார்களாம். 
குன்றிமணியின் மருத்துவ குணங்கள்
2 குன்றிமணிகள் என்பது ஒரு கிராம் என்பது அளவாகும். அதனால் எவ்வளவு தான் விலைஉயர்ந்த நகைகளை கழுத்தில் அணிந்திருந்தாலும், ஒன்றிரண்டு குன்றிமணி களையாவது அந்த செயின்களில் கோர்த்திருப்பார்களாம்.

சாமி சிலைகள் செய்தாலும், அந்த சிலைகளின் கண்களுக்கு குன்றிமணிகளை தான் வைப்பார்கள். 
அதே போல, வீடுகளில் பல்லாங்குழி, தாயக்கட்டை விளையாடினால், அதற்கும் இந்த குன்றிமணிகளை வைத்து விளையாடு வார்களாம். மணிச்சிகை, பவளக் குன்றி என்றெல்லாம் நிறைய பெயர்கள் இந்த குன்றிமணிகளுக்கு உண்டு.. 

இப்போதெல்லாம் குன்றிமணி மரங்களை அவ்வளவாக பார்க்க முடிவதில்லை. இந்த குன்றிமணி மரத்தின் விதைகளும், இலைகளும், பழங்களும் பட்டைகளும் மருத்துவ சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவைச் சேர்ந்த இந்த தாவரம் வெப்ப மண்டலப் பகுதிகளிலும், வேலி மற்றும் புதர்களிலும் வளர்கிறது. இந்தியாவில் பண்டைய காலத்தில் பொன் மற்றும் வைரங்களின் அளவு அறிய விதைகள் எடைகளாகப் பயன்பட்டன.
செயல்திறன் மிக்க வேதிப் பொருட்கள் விதைகளில் அபிரின், இன்டோன் ஆல்கலாய்டுகள், டிரை டெர்பினாய்டு சபோனின்கள், ஆந்தசை யானின்கள் உள்ளன. 

வேர்கள் மற்றும் இலைகளிலும் கிளைசரிரைசா, சிறிது அபிரினும் காணப் படுகின்றன. 

விதைகளில் அபிரின்கள் ஏ, பி,சி அபிரலின், அபிரைன், கேலிஜ் அமிலம், அமினோ அமிலங்கள், விதை எண்ணெயில் கரிம அமிலங்களான பால்மிடிக், ஸ்டிராக் ஒலியிக், லினோயிக் அமிலங்களும் பிரித்தெடுக்கப் பட்டுள்ளன.

இலைகள், வேர் மற்றும் விதைகள் மருத்துவப் பயன் கொண்டவை. இலைகளின் கசாயம் இருமல், சளி மற்றும் குடல்வலி போக்கும். இலையின் சாறுடன் எண்ணெய் கலந்து வலியுட னான வீக்கங்கள் மீது பூசப்படுகிறது. 
பற்களில் கூச்சம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் !
வெண்குஷ்டம், பித்தம், நமைச்சல், போன்ற தோல் வியாதிகளை நீக்க உதவும். வேர் வலுவேற்றி, சிறுநீர் போக்கு, வாந்தி தூண்டுவது, வாய்குழறச் செய்வது, பால் உணர்வு தூண்டுவது, நரம்புக் கோளறு களுக்கு மருந்தாகிறது. 

கருச்சிதைவு தோற்று விப்பது, விதைகளின் பசை மேல் பூச்சாக தோள் பட்டை வலி, தொடை நரம்பு வலி, மற்றும் பக்க வாதத்தில் பயன்படுகிறது.

முடி வளர குன்றிமணி :
குன்றிமணியின் மருத்துவ குணங்கள்
கையாந்தகரை சாறு நாலுபலம் எடுத்து ரெண்டு பலம் குன்றிமணிப் பருப்பு கலந்தரைத்து ஒரு பலம் எள் எண்ணெய் சேர்ந்து காய்ச்சி சீலை வடிகட்டி தினம் பூசப்பா கிழவனுக்கு குமரன் போல் சடை காணும்
பொதுவான கண் பிரச்சனைகளும் சிகிச்சைகளும் !
என்பது சித்தர் பாடல். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து நல்லெண்ணெயில் ஊற வைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். முடி நன்றாக செழித்து வளரும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)