தேவையானவை : 

ஆய்ந்த காலிஃப்ளவர் – ஒரு கப் (சூடான தண்ணீரில் போட்டு வடிகட்டவும்) 

இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் 

மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன் 

சிவப்பு ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை 

கார்ன் ஃப்ளார் (சோள மாவு) – 4 டீஸ்பூன் 

கடலை மாவு – 5 டீஸ்பூன் 

அரிசி மாவு – 2 டீஸ்பூன் 

எண்ணெய், உப்பு – தேவையான அளவு, 

செய்முறை: 
கிரிஸ்பி கோபி 65
காலி ஃப்ளவருடன் இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த் தூள், ஃபுட் கலர், கார்ன் ஃப்ளார், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்துப் பிசிறவும். 

வாணலியில் எண்ணெயைக் காய விட்டுப் பூக்களை எடுத்து எண்ணெயில் போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, பொன்னிற மாகப் பொரித் தெடுக்கவும்.