மாரினாரா பாஸ்தா செய்முறை | Marinara Pasta Recipe !





மாரினாரா பாஸ்தா செய்முறை | Marinara Pasta Recipe !

0
தேவையானவை

மாரினாரா சாஸ் செய்ய தேவையானவை :

பிரிஞ்சி இலை - 2

மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி

வெங்காயம் - ஒன்று

பூண்டு பல் - 2

பாஸ்தா - அரைக் கிலோ

காளான், காரட், பிராக்கோலி, முட்டைகோஸ், பட்டாணி, சோளம் - 2 கப்

உலர்ந்த பேசில், உலர்ந்த பார்ஸ்லி - தலா ஒரு தேக்கரண்டி

செலரி - 2 தாள்கள்

தக்காளி - 3 (அ) க்ரஷ்ட் (Crushed) டொமேட்டோ கேன் - ஒன்று

ஆலிவ் எண்ணெய் - கால் கப்

உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு

பாஸ்தா செய்ய : 

ஆலிவ் எண்ணெய், வெண்ணெய், உப்பு, - தேவையான அளவு

சீஸ் - தேவையான அளவு

செய்முறை :
 மாரினாரா பாஸ்தா

முதலில் சிறிதளவு எண்ணெய் (அரைக்கும் போது மீதம் உள்ள எண்ணெயை உபயோகிக்கவும்) 

விட்டு சாஸ் செய்ய தேவையான வற்றை (உப்பு மிளகு தூள் தவிர) வதக்கவும். 

ஆறியபின் உப்பு, மிளகு தூள் சேர்த்து அரைத் தெடுக்கவும். முழு தக்காளி உபயோகித் தால் சுடு நீரில் இட்டு தோலுரித்து பின்பு வதக்கவும்.

இப்பொழுது மாரினாரா சாஸ் ரெடி. வேறு ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் 

சிறிதளவு எண்ணெய் விட்டு உலர்ந்த ஹர்ப்ஸ் சேர்த்து வதக்கவும். 

பிறகு நறுக்கி வைத்த காய்கறிகள் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.

இதற்கிடையில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்த வுடன் பாஸ்தா சேர்த்து 10-15 அல்லது வேகும் வரை (இது பாஸ்தாவின் தன்மையை பொருத்து மாறும்) விட்டு வடி கட்டவும். 

உடனே வேறு ஒரு பாத்திரத்தில் பரப்பி மேலே எண்ணெய் தெளித்து ஆற விடவும். 

இல்லை யென்றால் ஒட்டிக் கொள்ளும்.இந்த பாஸ்தாவை காய்கறிக் கலவையில் கொட்டி கிளறவும்

ஐந்து நிமிடம் கழித்து இரண்டு கப் மாரினாரா சாஸ் சேர்த்து நன்கு கிளறவும்.

ஐந்து முதல் எட்டு நிமிடம் விட்டு மேலே தேவையான அளவு சீஸ் தூவி இரண்டு நிமிடம் விட்டு அடுப்பை அணைத்து விடவும்.

சுலபமாக செய்யக் கூடிய சத்தான வெஜ்ஜி பாஸ்தா வித் மாரினாரா சாஸ் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)