ஸ்பைசி இட்லி மஞ்சூரியன் செய்வது எப்படி?





ஸ்பைசி இட்லி மஞ்சூரியன் செய்வது எப்படி?

0
இட்லிக்கு மாவு அரைக்கும் போது உருட்டு உளுந்துடன் இந்த பொருளையும் சேர்த்து அரைத்தால் ஆரோக்கியம் கிடைக்குமே! எதை தொட்டாலும் அதில் ரசாயனம், பூச்சிக் கொல்லி என இருக்கிறது. 
ஸ்பைசி இட்லி மஞ்சூரியன்
மேலும் சிலர் குறைந்த காலத்தில் அதிக மகசூலை பெற சில ரசாயனங்களையும் ஹைபிரிட் வகைகளையும் பயன்படுத்துகிறார்கள். இதனால் அந்த காலம் போல் உணவு பொருட்கள் ஆரோக்கியமாக இருக்கிறதா என்றால் இல்லை!  

கருப்பு உளுந்தால் முதமையில் ஏற்படும் மூட்டு வலியையும் எலும்பு பிரச்சினைகளையும் தடுக்கலாம், இந்த கருப்பு உளுந்தில் இரும்புச் சத்து இருக்கிறது. 
இதனால் உடல் உறுப்புகளுக்கு சரியான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்கும். நீரிழிவு நோய் இருப்பவர்கள் எப்போதுமே கருப்பு உளுந்தை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

இதனால் அவர்களுக்கு நார்ச்சத்து கிடைக்கிறது. உங்கள் ரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும் முடியும். இதயத்திற்கும் இந்த உளுந்து மிகவும் நல்லது. கருப்பு உளுந்தில் ரத்த அழுத்தத்தை குறைக்கும் சக்தி உள்ளது. 
மேலும் ரத்த ஓட்டத்தை தூண்டி உடல் உறுப்புகளுக்கு அதிக அளவு ஆக்ஸிஜனை கொண்டு செல்லவும் உதவும். கர்ப்ப காலத்தில் கருப்பு உளுந்து பாதுகாப்பானது. கர்ப்பத்துக்கு நன்மை பயக்கும். 

அதே நேரம் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். உளுந்து எலும்புகளை பலப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு ஏற்படுவதை குறைக்கிறது. இதில் புரதசத்து அதிகம் உள்ளது.

தேவையானவை

ஆரஞ்சு ரெட் கலர் - ஒரு சிட்டிகை

இட்லிகள் - 5

இஞ்சி -பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

கார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி

கடலை மாவு - ஒரு தேக்கரண்டி

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி

சீரகத் தூள் - அரை தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் இட்லிகளை நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்பு அதனோடு இஞ்சி -பூண்டு விழுது, கார்ன் ஃப்ளார், கடலை மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், 

சீரகத் தூள், ரெட் கலர், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீரும் சேர்த்து நன்கு பிசறிக் கொள்ளுங்கள். பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெயைக் காய வைத்து, கலந்து வைத்துள்ள 

இட்லிகளை ஐந்தாறாகப் எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். சுவையான ஸ்பைசி இட்லி மஞ்சூரியன் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)