உணவில் காரம் நல்லது ஏன் தெரியுமா?





உணவில் காரம் நல்லது ஏன் தெரியுமா?

0
சீரியல் விளம்பரங்களின் இடைவேளையில் தான் பல வீடுகளில் இரவு உணவு தயாராகும்... பரிமாறப்படும்... என்கிற நிலையில், 
காரம் நல்லது ஏன்
இரவு உணவில் காரச்சத்து இருக்கலாமா? என்று கேட்டால் யாருக்குத் தான் கோபம் வராது.

ஆனால் ஆய்வு சொல்கிறது, ‘இரவு உணவில் காரச்சத்து அவசியம்’ என்று! ஆஸ்திரேலியாவின்

டாஸ்மேனியா பல்கலைக் கழகம் பத்தாண்டு களுக்கு முன்பு இந்த உண்மையைக் கண்டு பிடித்தது.

இரவு உணவில் மிளகு சேர்த்த வெண்பொங்கல், மிளகு ரசம், காய்ந்த மிளகாய் துவையல், காரச் சட்னி, மிளகாய் சேர்ந்த

குழம்பு, சாம்பார் இவற்றில் ஏதேனும் ஒன்று இடம் பெற்றால் நன்றாகத் தூக்கம் வருமாம்.

மிளகாய் சேர்க்கப்பட்ட உணவை இரவில் சாப்பிட்டவர்கள் நன்கு தூங்குவதைக் கண்டு பிடித்தார்கள்.

காரமில்லாமல் சாப்பிட்டவர்கள், ஒழுங்கான தூக்கம் இல்லாமல் அவதிக்கு ஆளானார் களாம்.

காரணம் என்ன?

மிளகாயில் உள்ள காரச்சத்து வளர்சிதை மாற்றத்தைத் துரிதப் படுத்துகிறது.

மூளையில் உள்ள கட்டுப்பாட்டு நரம்புகளை முழு வீச்சில் இயங்க வைக்கிறது.
இறால் ஃப்ரை செய்முறை !
இதனால் மூளையில் புத்துணர்ச்சி ஏற்பட்டு, உடனடியாக நல்ல தூக்கம் வருகிறது. நெஞ்செரிச்சல் வராமலும் தடுக்கிறது.

எனவே நெஞ்செரிச்சல் பிரச்னை உள்ளவர்கள் இரவில் கண்டிப்பாக புளி, காரம் சேர்ந்த குழம்போ,
ரசமோ, துவையலோ சேர்த்துக் கொண்டால் வளர்சிதை மாற்றம் துரிதமாக நடந்து விடும்.

நெஞ்சு எரிச்சல் ஏற்படாது. தூக்கமும் உடனே வந்து விடும். உடல் வலியையும் காரச்சத்து குணமாக்கும்.

‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே விஷம்’ என்கிற போது மிளகாய்? இதிலும் அளவு முக்கியம்.

வரமிளகாய்த் துவையலில் ஒரு தேக்கரண்டி போதும்... காரக் குழம்பும் அளவுடன் தான் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

காரம் அதிகம் சேர்ந்தால் வயிற்றில் புண் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. எனவே நெஞ்செரிச்சல் குணமாகவும்,

தூக்கம் வரவும் இரவு உணவில் எப்போதும் போல அளவான காரச்சத்து இருக்கும்படி பார்த்துச் சாப்பிட்டு வாருங்கள் என்கிறார்கள் ஆராய்ச்சி யாளர்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)