டேஸ்டியான அமிர்த கேசரி செய்வது எப்படி?





டேஸ்டியான அமிர்த கேசரி செய்வது எப்படி?

0
ரவையில் இருந்து தயாரிக்கப்படும் உணவு ஒருபுறம் மிகவும் சுவையாகத் இருந்தாலும், மற்றொரு புறம் அது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். 
அமிர்த கேசரி
சிலர் காலை உணவுகளில் மட்டும் அல்ல இனிப்பு வகைகளில் கூட இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். கோதுமையில் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் உள்ளது, இது உடலின் சக்தியை அதிகரிக்க வல்லது. 

ரவை கோதுமையிலிருந்து தயாரிக்கப் படுவதால் இது உடலின் சத்தியை அதிகரிக்க உதவுகிறது. அதனால் ரவையை கட்டாயமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ரவையில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. 
இதனால் உடலில் அதன் குறைபாட்டைத் தடுக்கும். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, அது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. 

எனவே, உங்களுக்கு இரத்த சோகை பிரச்சனை இருந்தால், ரவையால் செய்யப்பட்ட உணவு வகைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

ரவை ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இதில் மெக்னீசியம், ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

இந்த உணவு தொண்டாமுத்தூரை சேர்ந்த சமையல் நிபுணர் சாவித்திரி அவர்களால் ஒரு திருமண விழாவில் பரிமாறபட்டது.
தேவையான பொருட்கள் :

ரவை - 500 கிராம்

நெய் -250 மில்லி

கன்டன்ஸ்டு மில்க் ஒரு டின் (100 மில்லி)

பால் - 2 லிட்டர்

சர்க்கரை - 150 கிராம்

முந்திரி, திராட்சை (கிஸ்மிஸ்) - 50 கிராம்

ஏலக்காய் - 4

கிராம்பு - 3

டூட்டி ஃப்ரூட்டி - 1 டேபிள் ஸ்பூன்
ஹை ஹீல்ஸை தவிர்க்கவும் !
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து நெய் விட்டு முந்திரிப் பருப்பை வறுத்து வைக்கவும். மிக்ஸியில் ஏலக்காய், கிராம்பு, சிறிது சர்க்கரை சேர்த்துப் பொடியாக்கிக் கொள்ளவும்.

கடாயில் சிறிது நெய் விட்டு ரவையைப் பொன்னிற மாக (பாதி வெள்ளை பாதி பொன்னிற மாக) வறுத்துத் தனியாக வைக்கவும். 

அடுப்பில் வாணலியை வைத்துப் பாலை ஊற்றி அது கொதித்து வரும் போது ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறவும். ரவை வெந்து கொதி வரும்போது சர்க்கரையைச் சேர்த்து, தீயைக் குறைத்து வைத்துக் கிளறவும். 

சர்க்கரை சேர்த்ததும் உருகி நீராகும். அப்போது ஏலக்காய் கிராம்புப் பொடி, ஆகியவற்றைச் சேர்த்து கிளறி, இறுதியாக நெய் ஊற்றி கிளறி இறக்கவும்.  
உதடு மற்றும் வாய் பராமரிப்பு !
பரிமாறும் போது ஒரு ஸ்கூஃப் கேசரி, அதன் மேல் டூட்டி ஃப்ரூட்டி, கன்டன்ஸ்டு மில்க்,  நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை (கிஸ்மிஸ்) சேர்த்துப் பரிமாறவும்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)