என்னென்ன தேவை?

கோதுமை ரவா - 1/2 கப்

பால் – 1 கப்

தண்ணீர் – 1 கப்

சர்க்கரை – 3/4 கப்

ஏலக்காய்த் தூள் - 1/2 தேக்கரண்டி

நெய் – 1 டீஸ்பூன்

முந்திரி பருப்பு – சிறிதளவு

காய்ந்த திராட்சை - சிறிதளவு

கேசரி பவுடர் - சிறிதளவு

எப்படி செய்வது?
கோதுமை ரவா கேசரி
குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றவும். அதில் கோதுமை ரவா சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும். 

அதில் பால் ஊற்றவும் அடுத்து தண்ணீர் கலந்து கிளறி குக்கரை மூடி 2 விசில் வைத்து வேக விடவும். 

பின்னர் சர்க்கரை சேர்த்து கிளறி சில நிமிடங்களுக்கு பிறகு கேசரி பவுடர் கலந்து கெட்டியாக வரும் வரை கிளறவும். 

ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்த திராட்சை போட்டு வறுத்து கேசரியுடன் சேர்த்து கலந்தால் கோதுமை ரவா கேசரி ரெடி.