சூப்பரான கினோவா உப்புமா செய்வது எப்படி?

சூப்பரான கினோவா உப்புமா செய்வது எப்படி?

உப்புமா அல்லது உப்மா என்பது தென்னிந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட இந்தியாவின் பிரபலமான சிற்றுண்டியாகும். உப்பும் மாவும் சேர்ந்த கலவையே உப்புமா ஆகும். 
கினோவா உப்புமா
மிகக்குறைவான செய்பொருட்களைக் கொண்ட உப்புமா சுலபமாக தயாரிக்கப் படுவதாலும், சிறந்த சுவையுடையதாக இருப்பதாலும் பெரும்பான்மையான மக்களால் விரும்பப் படுகிறது.

பெயரைச் சொன்னாலே குழந்தைகள் தெறித்து ஓடும் ஒரு டிபன்..? உப்புமா! ஜவ்வரிசி, பிரெட், கோதுமை ரவை, அரிசி, சேமியா... என விதவிதமாகச் செய்து கொடுத்தாலும் கூட பெரும்பாலான குழந்தைகளுக்கு இது அலர்ஜி. 
ஆகாத மருமகன் வீட்டுக்கு வந்தா உப்புமாவைக் கிண்டி வை! என நம்மூரில் ஒரு பழமொழியே உண்டு. விருந்தினர்களின் திடீர் வருகையின் போது கைகொடுத்து உதவுவது. 

வேலைக்குப் போகும் மகளிருக்கு பல நாள்களுக்கு உற்றதுணையாக இருப்பது, 10 நிமிடங்களுக்குள் செய்து விடலாம் என்கிற பெருமைக்குரிய சிற்றுண்டி... என பல சிறப்புகளைக் கொண்டது உப்புமா.

இதுவும் மற்ற உப்புமாவைப் போல் சாதாரண மாக செய்ய கூடியது தான்.என்ன! வேக சிறிது நேரம் கூடுதலாக எடுக்கும். சரி இனி கினோவா பயன்படுத்தி சூப்பரான கினோவா உப்புமா செய்வது எப்படி?  என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையானப் பொருள்கள்:

கினோவா _ ஒரு கப்

சின்ன வெங்காயம் _ 7

பச்சை மிளகாய் _ 1

இஞ்சி _ சிறிது
எலுமிச்சை சாறு _ ஒரு டீஸ்பூன்

கொத்துமல்லி இலை _ ஒரு கொத்து

உப்பு _ தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய் ஒரு டீஸ்பூன்

கடுகு

உளுந்து

கடலைப் பருப்பு

காய்ந்த மிளகாய் _ 1

பெருங்காயம்

கறிவேப்பிலை
நாக்கை வைத்து உடல் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்க !
செய்முறை:
முதலில் கினோவாவை வெறும் வாணலியில் நன்கு சூடுவர வறுத்துக் கொள்ளவும். அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி இவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றி எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து, வெங்காயம், 

பச்சை மிளகாய், இஞ்சி இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி ஒன்றுக்கு இரண்டு என் தண்ணீர் ஊற்றி மூடி கொதிக்க விடவும்.

கொதி வந்ததும் கினோவாவைக் கொட்டி,உப்பு போட்டுக் கிளறி விட்டு மிதமானத் தீயில் மூடி வேக விடவும். வேகும் வரை இடையிடையேத் திறந்து கிண்டி விடவும்.

கினோவா நன்றாக வெந்து வரும் போது எலுமிச்சை சாறு விட்டு, கொத்து மல்லி தூவி இறக்கவும். இதற்கு நல்ல காரமானத் தேங்காய் சட்னிதான் மிகப் பொருத்த மாக இருக்கும்.
கீழ் வாதத்திற்கான காரணங்களும் அவற்றுக்கான வைத்திய சிகிச்சைகளும் !
குறிப்பு :

பெரும்பாலான மக்கள் எடை இழப்பிற்கான டயட்டிற்காக ஆரோக்கிய மாற்றுகளை தேடுகிறார்கள். 

ஆரோக்கியமான எடை இழப்புக்கு, சமச்சீரான உணவை உட்கொள்வதன் மூலம் மிதமான கலோரி பற்றாக்குறையில் இருக்க வேண்டும் என்று இன்ஸ்டாவில் குறிப்பிட்டு உள்ளார் உணவியல் நிபுணர் நிஹாரிக்கா புத்வானி. 

கோதுமை போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை விட அதிக ஊட்டச் சத்துக்கள் காரணமாக முழு தானியங்கள் சிறந்ததாக கருதப்படுகிறது.

எடை இழப்பிற்காக டயட் மேற்கொள்ளும் பலருக்கும் பார்லி மற்றும் கினோவா பற்றி தெரியாமல் இருக்காது. ஆனால் இந்த இரண்டில் சிறந்த எடை இழப்புக்கு எது உதவுகிறது என்பது பற்றி தெரியாமல் இருக்கலாம்.

இதனிடையே உணவியல் நிபுணர் நிஹாரிக்கா புத்வானி தனது இன்ஸ்டாவில் மேற்கண்ட 2 முழு தானியங்களில் எது எடை குறைப்பிற்கு சிறந்தது 

என்ற கேள்விக்கான பதிலில் பார்லி மற்றும் கினோவா ஆகிய இந்த 2 தானியங்களுமே உடல் எடையை குறைக்க உதவும். 
ஆனால் இங்கே நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்ன வென்றால், உடல் எடையை குறைக்க நீங்கள் அறிமுகமில்லாத உணவுகளை சாப்பிட வேண்டியதில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.
Tags: