சுவையான சப்பாத்தி ரோல் செய்வது எப்படி?





சுவையான சப்பாத்தி ரோல் செய்வது எப்படி?

0
நம் உடலுக்கு அதிமுக்கியத் தேவையான வைட்டமின் B, E மினரல்கள், காப்பர், ஸிங்க், ஐயோடின், சிலிகான், பொட்டாசியம் மற்றும் கால்சியம் மற்றும் இதர மினரல் உப்புகள் கோதுமை மாவில் அடங்கி யிருக்கின்றன. 
சுவையான சப்பாத்தி ரோல் செய்வது எப்படி?
சப்பாத்தியில் உள்ள ஸிங்க் மற்றும் இதர மினரல் சத்துகள் சருமத்திற்குப் பளபளப்பை அளிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும் போது தானே சருமமும் ஆரோக்கியம் பெறும்.

கார்போ ஹைட்ரேட் முழு கோதுமையில் மொத்தமாக நிறைந்துள்ளது. இதனால் ஒரு நாள் முழுவதும் ஆற்றல் சக்தியை உடலுக்கு அளித்து சுறுசுறுப்பும் அளிக்கிறது. மூளையின் செயல்திறனும் அதிகரிக்கிறது. 
நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு போன்ற நாள் பட்ட வியாதிகளால் அவஸ்தைப் படுவோருக்கு சப்பாத்தி தான் சிறந்த டயட் உணவு. இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதால் நோய்த் தொற்றுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளும். 

இது மற்ற உணவுகளோடு ஒப்பிடுகையில் கலோரி மிக மிகக்குறைவு. இதனால் உடல் எடையைக் கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள நினைப்போர் சப்பாத்தியை உண்ணலாம். 

அதே போல் சப்பாத்தி உண்டால் நீண்ட நேரம் பசியும் எடுக்காது. சரி இனி சுவையான சப்பாத்தி ரோல் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையானவை

சப்பாத்தி மாவு - தேவைக்கு

உப்பு - சிறிது

எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

ஸ்டஃபிங் தயாரிக்க: கொத்துக்கறி - 300 கிராம்

சிகப்பு மற்றும் மஞ்சள் நிற குடைமிளகாய்

சுரைக்காய் - ஒன்று

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கெட்சப், சில்லி சாஸ் - சிறிது

சீஸ் - சிறிது

லெட்யூஸ் இலை - சிறிது
வெங்காயம் - ஒன்று

மட்டன் மசாலா - ஒரு கரண்டி

கறி மசாலா - ஒரு கரண்டி

உப்பு - சிறிது
விதை இறக்கம் கீழிறங்கா ஆண் விதைகளுக்கான அறுவைச் சிகிச்சை
செய்முறை :
சுவையான சப்பாத்தி ரோல் செய்வது எப்படி?
சப்பாத்தி மாவுடன் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து பிசைந்து வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். குடை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

(இதில் ஃப்ரோசன் கறியை உபயோகித் துள்ளேன். ஃப்ரெஷ் கறியும் பயன் படுத்தலாம்). வாணலியில் எண்ணெய் ஊற்றி கறியைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

அதனுடன் குடை மிளகாய், வெங்காயம், சுரைக்காய் சேர்த்து வதக்கவும். பின் மசாலா வகைகள், உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். ஸ்டஃபிங் தயார்.

பிசைந்து வைத்துள்ள மாவை சற்று மெல்லியதாக பெரிய சாப்பாத்தி யாக போட்டுக் கொள்ளவும். பின் சப்பாத்தியை தவாவில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் இரண்டு பக்கமும் வேக விட்டு எடுக்கவும். 
அதன் மீது பெரியவர் களுக்கெனில் சில்லி சாஸும், குழந்தைகளுக் கெனில் கெட்சப்பும் தடவிக் கொள்ளவும். அதன் மேல் சிறிது ஸ்டஃபிங்கை வைக்கவும். பின் சிறிது சீஸ் வைக்கவும். சீஸின் மேல் சிறிது லெட்யூஸ் வைக்கவும்.

சப்பாத்தியின் இரண்டு ஓரங் களையும் இவ்வாறு மடிக்கவும். சப்பாத்தியை அப்படியே ரோல் செய்யவும்.சுவையான சப்பாத்தி ரோல் தயார்.

இதை இரவு நேர உணவாகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டி யாகவோ அல்லது குழந்தைகளுக்கு லஞ்ச்சாகவோ கொடுக்கலாம். எல்லா நேரத்திற்கும் ஏற்ற உணவு இது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)