சுவையான அவகாடோ கார்ன் சூப் செய்வது எப்படி?





சுவையான அவகாடோ கார்ன் சூப் செய்வது எப்படி?

அவகாடோ பழங்கள் பார்ப்பதற்கு அழகாவும், நல்ல சுவையாகவும் இருக்கும். முட்டை வடிவத்தில் இருக்கும் அவகாடோ பழம், கரடுமுரடான தோலுடன் காணப்படும். நன்கு முதிர்ந்த பின் ஊதா-கருப்பு நிறத்துடன் இருக்கும். 
சுவையான அவகாடோ கார்ன் சூப் செய்வது எப்படி?
வெண்ணெய் பழம் என்றழைக்கப்படும் அவகாடோ பழம் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தது, இதில் முக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் உள்ளன என தெரிவிக்கப் படுகிறது. 

வெண்ணெய் பழங்கள் அவற்றின் சுவை மற்றும் ஆரோக்கியத்தின் கலவையில் இணையற்றவை. இந்த பழத்தை உட்கொள்வது பொதுவான ஆரோக்கியத்தையும் நோய்களையும் தடுக்கிறது, 

ஏனெனில் இது முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும். இருதய ஆரோக்கியத்தில் அதன் நன்மையான தாக்கத்தை மீண்டும் ஒரு முறை நிரூபிப்பது என்பது பல ஆராய்ச்சிகளின் புதிய ஆய்வு மற்றும் மெட்டா பகுப்பாய்வு ஆகும். 

முடிவுகளின்படி, வழக்கமான உணவைப் பின்பற்றுபவர்களுடன் ஒப்பிடும் போது, வெண்ணெய் உணவைப் பின்பற்றுபவர்கள் ஒட்டு மொத்த கொலஸ்ட்ரால் அளவுகள், 

குறைந்த அளவு கெட்ட கொழுப்பு (எல்டிஎல்) மற்றும் அதிக அளவு நல்ல கொலஸ்ட்ரால் (எச்டிஎல்) ஆகியவற்றைக் கொண்டிருந்தனர். 

தேவையானவை:

ஆவகாடோ (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – ஒன்று,

உதிர்த்த ஸ்வீட் கார்ன் – ஒரு கப்,

பூண்டு – 2 பல்,

காய்கறி வேக வைத்த தண்ணீர் – 3 கப்,

கொத்த மல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு,

மிளகுத் தூள் – தேவையான அளவு, 

எண்ணெய் – தேவையான அளவு, 

எலுமிச்சைச் சாறு – தேவையான அளவு, 

உப்பு – தேவையான அளவு,

செய்முறை:
ஆவகாடோ கார்ன் சூப்
ஆவகாடோவை தோல் சீவி, அதில் உள்ள கொட்டையை எடுத்து விடவும். மிக்ஸியில்… ஆவகாடோ, காய்கறி தண்ணீர், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கவும்.

கடாயில் எண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கி, கார்னை போட்டு சிறிது நேரம் வதக்கவும். 

இதில் அரைத்த ஆவகாடோ கலவையை சேர்த்து வதக்கி, தேவைப் பட்டால் காய்கறி வேக வைத்த தண்ணீர் சிறிதளவு சேர்த்து கொதிக்க வைத்து…

அதில் மிளகு தூள் சேர்த்து இறக்கி… பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும்.

குறிப்பு:

ஆவகாடோ பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப் பை சம்பந்தமான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.  கொலஸ்ட்ரலைக் குறைக்கும்.
Tags: