ஆசார் அவா(க்) வெஜிடபிள் ஊறுகாய் செய்முறை / Ashera (Q) Vegetable Pickle Recipe !





ஆசார் அவா(க்) வெஜிடபிள் ஊறுகாய் செய்முறை / Ashera (Q) Vegetable Pickle Recipe !

0
தேவையானவை:

வெள்ளரிக்காய் – ஒன்று (பெரியது),

கேரட் – ஒன்று,

முட்டைகோஸ் – க்யூப்புகளாக அரிந்தது (மெல்லியதாக இல்லாமல் ஒவ்வொரு முட்டைகோஸ் இதழும் ஒரு சதுர இன்ச் துண்டுகளாக) – அரை கப்,

எள் – ஒரு டேபிள் ஸ்பூன்,

கொர கொரப்பாகப் பொடித்த வேர்க்கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்,

நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,

வினிகர் – 1+1+1 டேபிள் ஸ்பூன்,

சர்க்கரை – ஒரு டீஸ்பூன்,
புளித்தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப.

இவற்றோடு, சில்லி சம்பல் பேஸ்ட் , கூடுதலாக அதில் 2 இன்ச் லெமன் க்ராஸ் மட்டும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை:
ஆசார் அவா(க்) வெஜிடபிள் ஊறுகாய்
கேரட்டை 2 இன்ச் அளவு நீளவாக்கில் நறுக்கவும்.

வெள்ளரிக்காயை இரண்டாக வெட்டி, நடுவில் இருக்கும் விதைப் பகுதியை ஸ்பூனால் வழித்து எடுத்து விட்டு, அகலவாக்கில் 1/4 இன்ச் அளவு வெட்டவும்.

அதில் ஒரு டேபிள்ஸ்பூன் வினிகரும், சிறிது உப்பும் கலந்து, விதை நீக்கிய வெள்ளரிக்காயைப் பிரட்டி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க விட்டு, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் வினிகர், நறுக்கிய கேரட், முட்டைகோஸ் சேர்த்து

ஒரு கொதி வந்ததும் அடுப்பி லிருந்து இறக்கி, ஒரு நிமிடம் கழித்து தண்ணீரை வடிக்கவும்.

வெள்ளரியுடன் வடித்த காய்களையும் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு, தண்ணீர் இல்லாமல்
பிழிந்தாற் போல் எடுத்து ஒரு தட்டில் பரப்பி, வெயிலில் உலரும்படி சிறிது நேரம் வைக்கவும்.

எள்ளை வெறும் வாணலியில் வறுக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து,

அரைத்து வைத்திருக்கும் சில்லி சம்பல் பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும்.

இரண்டு நிமிடம் கழித்து புளித் தண்ணீர் சேர்த்து, அது கொதித்துக் கொண்டிருக்கும் போதே

மசாலாவு க்குத் தேவையான அளவு உப்பு, வினிகர், சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.

பின்னர் வேர்க்கடலைப் பொடி சேர்த்து, உடன் உலர்ந்திரு க்கும் காய்களையும் சேர்த்து, ஒருசேர நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.

இதனுடன் வறுத்த எள்ளை சேர்த்துப் பிரட்டி, ஆறியதும் ஒரு கண் ணாடி பாட்டிலில் சேமித்து ஃபிரிட்ஜில் வைக்கவும்.

மூன்று நாட்களுக்குப் பிறகு எடுத்துச் சாப்பிட, மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு: 

இதில் பீன்ஸ், காலி ஃப்ளவரும் சேர்க்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)