தேங்காய் - வேர்க்கடலை சூப் செய்வது எப்படி?





தேங்காய் - வேர்க்கடலை சூப் செய்வது எப்படி?

தேங்காயை இரண்டாக உடைத்து அதன் உள்ளே காணப்படும் பருப்பைத் துருவி பெறப்படும் தேங்காய்ப் பூவை நீரிட்டுப் பிழிந்து பெறப்படும் வெள்ளைநிறப் பாலே தேங்காய்ப்பால் எனப்படும். 
தேங்காய் - வேர்க்கடலை சூப் செய்வது எப்படி?
இதுவே இன்றைய காலகட்டத்தில் இலங்கை, இந்தியா மற்றும் மேலை நாட்டு மக்களின் சமையலில் முக்கிய இடம் பெறுகிறது. 

நம்மில் நிறைய பேருக்கு இரவில் தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு உண்டாகும். அதனால் தேங்காயை பாலாக எடுத்துப் பயன்படுத்துவது நல்லது. 

தேங்காய்ப் பாலை இரவில் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. தேங்காய்ப் பூவில் அதிகளவு ஊட்டச்சத்து நிறைந்திருப்பதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி பல மடங்கு அதிகரிக்கும். 

தேங்காய்ப் பூவில் குறிப்பாக ஆன்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைய உள்ளது. இதனால் விரைவில் முதுமை அடைவதைத் தடுக்கும். 

தோலில் சுருக்கங்கள், வயதான தோற்றம், சருமத் தொய்வு போன்ற பிரச்னைகளை நம்மை நெருங்க விடாது. 

இது இறைச்சி அல்லது காய்கறிகள், மசாலா பொருட்களை உணவு அல்லது தண்ணீருடன் சேர்த்து சமைப்பதின் மூலம் தயாரிக்கப் படுகிறது. 
ஒரு பானையில் தேவையான தண்ணீர் ஊற்றி, மசாலா பொருட்களைக் சேர்த்து திரவங்களில் சுவைகள் பிரித்தெடுக்கப்படும் வரை கொதிக்க வைக்கப்படும் போது ஒரு குழம்பு உருவாகின்றது. 

சரி இனி தேங்காய், வேர்க்கடலை பயன்படுத்தி டேஸ்டியான தேங்காய் - வேர்க்கடலை சூப் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

தேவையானவை :

தேங்காய்ப்பால் – 2 கப்,

கடலை மாவு – 2 டீஸ்பூன்,

பொடித்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன்,

வெள்ளரிக்காய் – 2 டீஸ்பூன்,

தக்காளி – 2 டீஸ்பூன்,

கொத்தமல்லி இலை – 2 டீஸ்பூன்,

பச்சை மிளகாய் – 2,

எண்ணெய் – 1/2 டீஸ்பூன்,

சீரகம் – 1/2 டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு,

மிளகுத் தூள் – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
தேங்காய்ப் பால், கடலை மாவு இரண்டையும் சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும். 

ஒரு கடாயில் எண்ணெய் காய வைத்து சீரகம் மற்றும் பச்சை மிளகாய் தாளித்து கரைத்த மாவை ஊற்றி நன்கு கிளறவும்.
3 நிமிடங்களு க்குப் பிறகு வெள்ளரிக் காய், தக்காளி, பொடித்த வேர்க்கடலை, உப்பு, மிளகுத் தூள் மற்றும் கொத்த மல்லி இலை சேர்த்து சூப் பரிமாறவும்.
Tags: