ரவா கிச்சடி செய்வது எப்படி?





ரவா கிச்சடி செய்வது எப்படி?

ரவையில் ஒரே ஒரு விரும்பத் தகாத அம்சம்னா அதுல இருக்கற குளூட்டனைச் சொல்லலாம். குளூட்டன் ஃப்ரீ டயட் ஃபாலோ பண்றவங்க தயவு செய்து செமோலினா ரவையை தவிர்த்துடுங்க.
ரவா கிச்சடி செய்முறை
ரவையில் விட்டமின் பி சத்தும் அதிகம். அதாவது கைக்குத்தல் அரிசியில் இருக்கறதா சொல்லப்படக் கூடிய ஃபோலேட் மற்றும் தயமின் சத்துக்கள் ரவையிலும் உண்டாம். 

இது நம்மை ஆற்றலோடு இயங்க வைக்கறதோட மூளைச் செயல்பாட்டையும் அதிகரிக்கச் செய்யும்ங்கறாங்க. செமோலினா ரவையின் அடுத்த சிறப்பு அதிலிருந்து கிடைக்கக் கூடிய செலினியம்ங்கற வேதிப்பொருள். 

இது மிகச்சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு இதய நோய்களை கட்டுப்படுத்தும் காரணியா விளங்குது. சண்டே மார்னிங், இன்னைக்கு நான்வெஜ் டே. மார்னிங் சமைக்க காய்கறி எல்லாம் எதுவும் கிடையாது. 

மத்யான, வேற ஹெவி லஞ்ச் சாப்பிடப் போறோம். அதனால காலையில லைட்டா உப்புமா சாப்பிட்டா போதும்... 

ராத்திரி திடீர்னு கெஸ்ட் வந்துட்டாங்க, சாப்பிடாம வேற வந்துட்டாங்க, சட்டுன்னு அவங்களுக்கு என்ன சமைச்சுத் தர்றது, அட ரவை இருக்கப் பயமேன்.
தேவையானவை: 

ரவை - ஒரு கப், 

தண்ணீர் - இரண்டே கால் கப், 

பச்சை மிளகாய் - 3, 

வெங்காயம் - 2, 

தக்காளி - 3, 

மஞ்சள் தூள் - சிறிதளவு, 

பட்டை - ஒன்று, 

லவங்கம் - 2, 

இஞ்சி - பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன், 

எண்ணெய், உப்பு - தேவை க்கேற்ப. 

செய்முறை: 

ரவையை தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். 

கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், இஞ்சி - பூண்டு விழுதுடன் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகிய வற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும். 

கடைசி யாக மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும், வறுத்த ரவையை அதில் கொட்டி கிளறவும். 
பிறகு, அடுப்பை 'சிம்’மில் வைத்து மூடி வைக்கவும். பத்து நிமிடங்கள் கழித்து திறந்து பார்த்தால், மணமும் சுவையும் நிறைந்த ரவா கிச்சடி ரெடி! 

விருப்பப் படுபவர்கள் இந்த கிச்சடியில் வேக வைத்த காய்கறி களைச் சேர்த்தும் சமைக்க லாம்.
Tags: