ருசியான பொரி வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி?





ருசியான பொரி வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி?

பஃப்டு ரைஸ் மற்றும் பெர்ச் அரிசி என்று அழைக்கப்படும் பொரி பலரின் விருப்பமான சிற்றுண்டி உணவாக உள்ளது. 
பொரி வெஜிடபிள் பிரியாணி
அதிலும், பொரியில் செய்யும் காரப்பொரி, மசாலா பொரி, பேல் பூரி போன்றவற்றின் பெயரைக் கேட்டாலே பலரின் நாக்குகளில் எச்சில் ஊறும். 

நெல்லில் இருந்து தாயரிக்கப்படும் இப்படிப்பட்ட பொரியில் நம்பமுடியாத ஊட்டச்சத்துகள் நிறைந்து உள்ளன என்பதை பலரும் உணர்ந்து இருக்கவே மாட்டோம். 

நார்ச்சத்து நிறைந்த பொரியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கலை போக்க முடியும். 

பொரியை தினசரி எடுத்துக் கொள்வதால், மலத்தில் உள்ள சளி மற்றும் அதிகப்படியான கொழுப்பின் அளவு குறைந்து, குடல் ஒட்டிக்கொள்வதைத் தடுக்கும். 
இதனால் மலம் கழிப்பது எளிதாகும். மலச்சிக்கல் ஏற்படாது. சக்திவாய்ந்த செரிமானத் தூண்டுதலாக பொரி உள்ளது. 

பொரியில் உள்ள ஊட்டச்சத்துகள் வயிறு மற்றும் குடலில் உள்ள உணவுத் துகள்களை உடைத்து, செரிமானத்துக்கு தேவையான அமிலங்களின் சுரப்பை ஊக்குவிக்க செய்கிறது.

பொரி வெஜிடபிள் பிரியாணி குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவ ருக்கும் பிடிக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். 
தேவையான பொருட்கள் : 

கேரட் - 50 கிராம் 
முட்டைக்கோஸ் - 50 கிராம் 

பச்சை பட்டாணி - 50 கிராம் 

தக்காளி - 50 கிராம் 

வெங்காயம் - 100 கிராம் 

பீன்ஸ் - 50 கிராம் 

புதினா, கொத்த மல்லித் தழை - 1 கட்டு 

பொரி - 1 கிலோ 

இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன்  

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்  

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 

கரம் மசாலா - 1 ஸ்பூன் 

தனியா தூள் - 1 டீஸ்பூன் 

டோமேடோ சாஸ் - 1 ஸ்பூன் 

சோயா சாஸ் - 1 ஸ்பூன் உப்பு, 

எலுமிச்சபழச் சாறு - சுவைக்கேற்ப 

செய்முறை : 

கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ், தக்காளி, கொத்த மல்லி, தக்காளி, வெங்காய த்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காய த்தை போட்டு வதக்கவும். 

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 
அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கி யதும் காய்கறிகள், புதினா, கொத்த மல்லி, பச்சை பட்டாணியை போட்டு வதக்க வேண்டும். 
காய்கறிகள் நன்றாக வெந்தவுடன்  மிளகாய்த் தூள்,  மஞ்சள் தூள்,  கரம் மசாலா,  தனியா தூள் போட்டு நன்றாக பச்சை வாசம் போக வதக்க வேண்டும். 

இறுதியாக உப்பு, சோயா சாஸ், டோமேடோ சாஸ் ஊற்றி இறக்கி பொரியை போட்டு கிளறி எலுமிச்சை சாற்றை ஊற்றி கிளறி பரிமாறலாம். சூப்பரான பொரி வெஜிடபிள் பிரியாணி ரெடி.
Tags: