ருசியான ரெயின்போ ஜெல்லோ கேக் செய்வது எப்படி?

ருசியான ரெயின்போ ஜெல்லோ கேக் செய்வது எப்படி?

சைவம், அசைவம் என்று எந்த வகை உணவும் எடுத்துக் கொள்பவர்கள், இறுதியாக ஏதேனும் பழம் அல்லது இனிப்பு கலந்த உணவு எடுத்துக் கொள்வது வழக்கம். 
ருசியான ரெயின்போ ஜெல்லோ கேக் செய்வது எப்படி?
அது ஐஸ்கிரீம், ஐஸ் கிரீம் கலந்த பழக் கலவை, ஃபலூடா என்னும் பழங்கள், நட்ஸ், ஜெல்லி, ஐஸ்கிரீம் கலவை, கஸ்டர்ட், பழ ஜூஸ், மில்க் ஷேக், வெறும் இனிப்பு என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

இப்போதைய டிரண்டிங்கில், வாசனையாக, வண்ணமயமாக, ஆசையையும், ஆர்வத்தையும் தூண்டும் அளவிற்கு உணவுகளை பரிமாறுவது தான் அனைவருக்கும் பிடிக்கும் ஒன்று. 

அதில் நுணுக்கமான சமையல் கலையும் அடங்கியுள்ளது. அந்த வகையில், ஜெலட்டின் கலந்த உணவுகள் இப்போது ஏராளம். 

பல வண்ணங்களில் கிடைக்கும் ஜெல்லி அல்லது ஜெல்லடின் பவுடராக, சிறு குச்சிகளாக, சிறு துகள்களாகக் கிடைக்கிறது. 

இதைத் தண்ணீருடன் கலந்து குளிர்விக்கும் போது, கொழ கொழப்பான அதே நேரம் கெட்டியான, தளதளவென்ற பதத்தில் சிறு சிறு கேக்குகள் கிடைக்கும். இவைதான் பல வகையான இனிப்புகளில் சேர்க்கப் படுகின்றன.

தேவையானவை  :  

கோகனட் மில்க் ஜெல்லி செய்ய… 

திக்கான தேங்காய்ப் பால் – 2 கப், 

அன் ஃப்ளேவர்டு ஜெலட்டின் – 4 டீஸ்பூன், 

சர்க்கரை – 5 டேபிள் ஸ்பூன், 

உப்பு – ஒரு சிட்டிகை, 

வெனிலா எசென்ஸ் – 1½ டீஸ்பூன். 
ஜெல்லி செய்ய… 
ஜெலட்டின் – 3 டீஸ்பூன், 

வெது வெதுப்பான தண்ணீர் – 500 மி.லி., 

மஞ்சள், பச்சை, இளஞ் சிவப்பு, ஆரஞ்சு ஃபுட் கலர் – ஒவ்ெவாரு துளி, 

லெமன், கிரேப், ஸ்ட்ராபெரி, ஆரஞ்சு ஃப்ளேவர் – தேவைக்கு.

செய்முறை  : 
ருசியான ரெயின்போ ஜெல்லோ கேக் செய்வது எப்படி?
ஒரு பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீரில் ஜெலட்டினை சேர்த்து 5 நிமிடத்திற்கு அப்படியே வைக்கவும். பிறகு சர்க்கரை சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும். 
இந்த கலவையை நான்கு சமபாகங் களாக பிரித்து (ஒவ்வொன்றும் 125 மி.லி.) நான்கு பாத்திரத்தில் ஊற்றவும். 

ஒவ்வொரு பாத்திரத் திலும் ஒவ்வொரு ஃபுட் கலர் மற்றும் அதற்கேற்ற ஃப்ளேவர் சேர்த்து கலக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒவ்வொரு கலவையையும் கொதிக்க விட்டு இறக்கி ஆற விடவும். 

ஆறியதும் எண்ணெய் தடவிய டப்பாக் களில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து, துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தேங்காய்ப் பாலில், ஜெலட்டின், சர்க்கரை சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும். 

அடுப்பை மிதமான தீயில் வைத்து, இந்த கலவையை வைத்து ஒரு கொதி வந்ததும் உப்பு, வெனிலா எசென்ஸ் சேர்த்து கிளறி இறக்கவும். 
எண்ணெய் தடவிய கேக் டின்னில் தேங்காய்ப் பால் மில்க் ஜெல்லி கலவையை ஊற்றி, அதில் துண்டாக்கிய கலர் ஜெல்லியை போட்டு 
ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து எடுத்து, கலர்ஃபுல் ஜெல்லியை துண்டுகள் போட்டு பரிமாறவும்.
Tags: