தேவையானப் பொருள்கள்:

கோதுமை ரவை - 2 கப்

பச்சைப் பருப்பு - 1/2 கப்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

தாளிக்க:

நெய் - 2 டீஸ்பூன்

மிளகு - ஒரு டீஸ்பூன்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

முந்திரி - 10

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

கறிவேப்பிலை

செய்முறை:

கோதுமை ரவை பொங்கல்
இதன் செய்முறை யும் சாதாரண வெண் பொங்கல் செய்வது மாதிரி தான். முதலில் பச்சைப் பருப்பை வெறும் வாணலி யில் சிவக்க, வாசம் வரும் வரை 

வறுத்து ஆறியதும் கழுவி விட்டு, தேவை யானத் தண்ணீர் விட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

பாதி வெந்த நிலையில் கோதுமை ரவையைக் கழுவி விட்டு (வறுக்க வேண்டாம்) ஒன்றுக்கு மூன்று 

அல்லது அதற்கும் மேல் தண்ணீர் விட்டு, உப்பு போட்டு பருப்புடன் சேர்த்து வேக விடவும். 

இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து குழைய வேக வேண்டும். ஒரு வாணலி யில் நெய் விட்டு தாளிக்கக் 

கொடுத் துள்ளப் பொருள் களைத் தாளித்து பொங்கலில் கொட்டிக் கிளறி இறக்கவும்.

அல்லது தாளிப்பு முடிந்ததும் பொங்கலை வாணலி யில் கொட்டிக் கிளறி இற‌க்கலாம்.

பொங்கலு க்கு தேங்காய் சட்னி அல்லது சாம்பார் நன்றாக இருக்கும்.