அருமையான கோதுமை மாவு கேசரி செய்வது எப்படி?





அருமையான கோதுமை மாவு கேசரி செய்வது எப்படி?

கோதுமையில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளன. கோதுமை மாவில் சப்பாத்தி, பூரி, அல்வா எனப் பல வகையான ரெசிப்பிகளை செய்து சாப்பிட்டு இருப்போம்.
கோதுமை மாவு கேசரி
கோதுமை மாவு இரத்தத்தினை சுத்தம் செய்வதாக உள்ளது. மேலும் கோதுமையில் உள்ள அதிக அளவு நார்ச் சத்து காரணமாக அது உடல் எடையினைக்  குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் கோதுமையில் சப்பாத்தி செய்து சாப்பிட வேண்டும். கோதுமையானது சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றது. 

மேலும் உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் சப்பாத்தியாக மட்டுமல்லாமல்,  கோதுமையில் கஞ்சி, கோதுமையில் உப்புமா, கோதுமையில் தோசை என வித்தியாசமாக செய்து சாப்பிடலாம். 
கோதுமை தானியத்தில் இருந்து பால் பிழிந்து காய்ச்சிக் குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள். சம்பா கோதுமையைச்  சாப்பிடும் போது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சர்க்கரை அளவு கணிசமாகக் குறையும். 
வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமையை ரவை போல அரைத்து கஞ்சி செய்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும். 

தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும். சரி இனி கோதுமை மாவு பயன்படுத்தி அருமையான கோதுமை மாவு கேசரி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையான பொருட்கள்: 

கோதுமை மாவு - 1 கப் 

வெல்லம் பொடி செய்தது - 3/4 கப் 

நெய் - 1/2 கப் 

சுக்குப் பொடி - 1/2 டீஸ்பூன் 

ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன் 

முந்திரிப் பருப்பு - 5 அல்லது 6 

தண்ணீர் - ஒன்றரை கப் 
செய்முறை: 

கால்கப் நெய்யை ஒரு வாணலியில் விட்டு, அதில் கோதுமை மாவைக் கொட்டி, மிதமான தீயில், மாவின் நிறம் மாறி வாசனை வரும் வரை வறுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் ஒன்றரைக் கப் தண்ணீரை விட்டு, கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்ததும், அதில் வெல்லத் தூளைப் போட்டு, வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைத்துக் கிளறி, கீழே இறக்கி, வடிகட்டிக் கொள்ளவும். 

வடிகட்டிய வெல்லத்தை, அடி கனமான ஒரு வாணலியில் ஊற்றி, அடுப்பி லேற்றி மீண்டும் கொதிக்க விடவும். வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சிறிது சிறிதாக வறுத்து வைத்துள்ள கோதுமை மாவைத் தூவி, கை விடாமல் கிளறவும். 
மத்தவங்க முன்னாடி சும்மா கெத்தா இருக்கணுமா?
மாவு சிறிது நேரத்தில், வெல்லப் பாகுடன் சேர்ந்து கெட்டி யாகி விடும். மீதியுள்ள நெய், சுக்குப் பொடி, ஏலக்காய்த் தூள், முந்திரிப் பருப்பு (சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும்) 
ஆகிய வற்றைச் சேர்த்து, நன்றாகக் கிளறி, நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி வைக்கவும். இதைக் கத்தியால் கீறி, துண்டங்களாக வெட்டி எடுக்கலாம். அல்லது, அப்படியே ஒரு ஸ்பூனால் எடுத்தும் பரிமாறலாம்.
Tags: