தேவையானவை:

பருப்புக் கீரை - 1/2 கட்டு

பச்சைப் பயறு - 1/4 கப்

சின்ன வெங்காயம் - 5

தக்காளி - 1

பூண்டிதழ் - 2

அரைக்க:

தேங்காய் பத்தை - 3

காய்ந்த மிளகாய் - 1 (காரத்திற் கேற்ப)

சீரக‌ம் - கொஞ்சம்

தாளிக்க:

நல்லெண்ணெய்

கடுகு

உளுந்து

சீரகம்

காய்ந்த மிளகாய்

பெருங்காயம்

கறிவேப்பிலை

செய்முறை:

பருப்புக் கீரை

கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து தண்ணீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.

பச்சைப் பயறு வேக ஆகும் தண்ணீரின் அளவைவிட ஒன்றிரண்டு டீஸ்பூன்கள் கூடுத லாக விட்டு 

பூண்டிதழ், பெருங்காயம், மஞ்சள் தூள், இரண்டு துளி விளக்கெண் ணெய் சேர்த்து மலர‌ வேக வைக்கவும்.குழைந்து விட வேண்டாம்.

பயறு பாதி வேகும்போதே வெங்காயம்,தக்காளி சேர்த்து வேக விடவும்.

தேங்கா யுடன், சீரகம், காய்ந்த மிளகாய் இவற்றை மிக்ஸி யில் போட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.

வெந்து கொண்டி ருக்கும் பயறில் அரைத்த விழுது + கீரை இரண்டை யும் சேர்த்து கிண்டி விட்டு கொதிக்க விடவும்.

கீரை வெந்து எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் தாளிக்க வேண்டி யதைத் தாளித்து கீரையில் கொட்டிக் கலக்கவும்.

இதனை சாதத் துடனோ அல்லது சாதத்துக்கு பக்க உண வாகவோ சாப்பிட லாம்.