மைசூர் பாக் செய்முறை / Mysore Pak Recipe !





மைசூர் பாக் செய்முறை / Mysore Pak Recipe !

தேவையானவை:

கடலை மாவு - 1 கப்

சர்க்கரை - 1 கப்

நெய் - 1 கப்

தண்ணீர் - 3/4 கப்

செய்முறை:
கடலை மாவை நன்றாக சலித்து எடுத்துக் கொள்ளவும்.ஒரு வாணலி யில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய்

மைசூர் பாக்

அல்லது நெய் எடுத்துக் கொண்டு சூடாக் கவும். மிதமானத் தீயாக இருக் கட்டும்.அதில் மாவைக் கொட்டி வதக்கவும்.

பச்சை வாசனைப் போக நன்றாக வதக்க வேண்டும். அப்போது தான் மாவைப் பாகில் சேர்க்கும் போது கட்டித் தட்டாமல் இருக்கும்.

ஒரு அடி கனமான வாணலி யில் சர்க்கரை, தண்ணீர் எடுத்துக் கொண்டு சூடுபடு த்தவும்.

மற்றொரு அடுப்பில் ஒரு பாத்தி ரத்தில் நெய்யை எடுத்துக் கொண்டு சூடு படுத்தவும்.

இரண்டிலும் தீ மிதமாக இருக்கட்டும். இப்போது சர்க்கரை கொஞ்சம் கொஞ்ச மாகக் கரைந்து கொதிக்க ஆரம்பிக்கும்.

ஒரு தோசைத் திருப்பி யால் கிண்டிக் கொண்டே இருக்கவும். நீளக் கம்பிப் பாகு பதம் வந்ததும் சிறிது சிறிதாக மாவை பாகில் கொட்டிக் கிளறவும்.

(பாகை விரல்களில் எடுத்து உருட்டி விரல் களைப் பிரித்தால் நீளக் கம்பியாக வரும்.) விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
மாவு முழுவதும் தீர்ந்த பிறகு சூடான நெய்யை ஒவ்வொரு ஸ்பூனாக எடுத்து கலவை யில் ஊற்றிக் கிளறிக் கொண்டே இருக்கவும்.

சூடாக நெய்யை ஊற்றும் போது மாவு வெந்து வருவது தெரியும். வாசனை வந்து வெளுத்து நுரைத்து வாணலி யில் ஒட்டாமல் வரும் போது

ஒரு துளிக்கும் குறைவாக‌ சோடா உப்பை சேர்த்துக் கிளறி ஒரு நெய் தடவியத் தட்டில் கொட்டி சமப் படுத்தவும். 

சிறிது ஆறியதும் தேவை யான வடிவத்தில் துண்டுகள் போடவும். நன்றாக ஆறிய பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கவும்.
Tags: