சத்தான மோர் களி செய்வது எப்படி?





சத்தான மோர் களி செய்வது எப்படி?

மோரில் உள்ள எலக்ட்ரோலைட்ஸ் நம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் மோருடன் உப்பு சேர்த்து தினம் குடித்து வர உடல் மற்றும் சரும வறட்சி பிரச்சனைகள் நீங்கும். 
சத்தான மோர் களி
நாம் உண்ணும் உணவில் உள்ள கழிவுகளை போக்கி, உணவின் சத்துக்களை முழுமையாக உடலுக்கு கொண்டு சேர்க்கும் பணியை மோரில் உள்ள சேர்மங்கள் செய்கிறது. 

இதனால், கல்லீரலின் ஆரோக்கியம் மேம்படும். மலச்சிக்கல், செரிமான பிரச்சனை உள்ளவர்கள் மோர் குடிப்பது நல்லது. 

மோரில் காணப்படும் புரோபயோடிக்ஸ் என்ற பாக்டீரியாக்கள், உடலில் செரிமான செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. 

வீட்டில் இருக்கும் சாமாங்களை வைத்து காலம் காலமாக நம் பாட்டிகள் செய்து வந்த அருமை யான சிற்றுண்டி இது.

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் சிறுநீர் கடுப்பு, எரிச்சலுடன் சிறுநீர் கழிதல், தாகம் போன்ற பிரச்னைகளுக்கு நீர்மோர் குடிப்பதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மோர் சுவையாக இருக்கிறது என்பதை விட, நமக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. ஆனால், மோர் சாப்பிட்டால் உடல்நிலை சரியில்லாமல் போய்விடும் என்ற எண்ணத்தில் பலர் மோர் சாப்பிட பயப்படுகிறார்கள்.

தேவையான பொருட்கள் : 

அரிசி மாவு - 2 கப் 

நல்லெண்ணெய் - 50 மில்லி 

கெட்டி மோர் - 4 கப் 

உப்பு - தேவையான அளவு 

தாளிக்க : 

கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, மி.வத்தல் மற்றும் மோர் மிளகாய் வத்தல் - தலா 2, 

பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - தேவையான அளவு.
செய்முறை :

அரிசி மாவு, மோர் கலந்து உப்பு சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். (தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்) 

அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப் பட்டுள்ள பொருட்களை தாளித்து பின் மாவு கலவையை அதில் ஊற்றவும், கை விடாமல் நிதானமாய் கிளறவும். 

தள தளவென்று கொதித்து அல்வா போல் ஒட்டாமல் சுருண்டு வரும். அந்த பக்குவம் வந்ததும் ஒரு தட்டில் நல்லெண்ணை தடவி அதில் இதை விட்டு பரப்பவும். 

ஆறியவுடன் வில்லைகள் போட்டு சாப்பிடவும். சுவையான சத்தான மோர் களி ரெடி.
Tags: