டேஸ்டியான மீல் மேக்கர் கோலா செய்வது எப்படி?





டேஸ்டியான மீல் மேக்கர் கோலா செய்வது எப்படி?

மீல்மேக்கர் என்ற உணவுப் பொருள் சோயாபீன்ஸிலிருந்து தயாரிக்கப் படுகிறது. தானிய வகைகளிலேயே சோயாவில் தான் அதிகமாக புரதச்சத்து உள்ளது 100 கிராம் சோயாவில் 28.6 கிராம் புரதம் இருக்கிறது. 
டேஸ்டியான மீல் மேக்கர் கோலா செய்வது எப்படி?
இந்த புரதத்தில் நம் உடலுக்குத் அடிப்படைத் தேவையான அமினோ அமிலங்கள் அனைத்தும் இருக்கு. மாமிச உணவுக்கு இணையாக வரக்கூடிய ஒரே ஒரு சைவ புரதம் சோயா பீன்ஸ்.

இதில் ப்ரோட்டீன் மட்டுமல்லாது ஏராளமான நியூட்டிரிசியன்கள், விட்டமின்ஸ் நிரம்பியிருக்கிறது. விட்டமின்கள் என்று பார்த்தால் சோயா பீன்ஸில் விட்டமின் கே, ரிபோஃப்லேவின், ஃபோலேட், விட்டமின் பி6, தியாமின் மற்றும் விட்டமின் சி ஆகியவை அடங்கும்.

இதே மினரல்ஸ்கள் என்று பார்த்தால் இரும்புச்சத்து, மக்னீஸ், பாஸ்பரஸ், காப்பர், பொட்டாசியம், மக்னீசியம், ஜிங்க், செலினியம் மற்றும் கால்சியம் ஆகியவை அடங்கும்.

சோயாவில் கொழுப்புச் சத்து குறைவாகவே இருக்கும் 100 கிராம் சோயாவில் 20 கிராம் கொழுப்பு தான் உள்ளது. சோயாவில் கார்போ ஹைட்ரேட்டின் அளவு மிக மிகக் குறைவு தான். 
சோயாவில் நல்ல நார்ச்சத்து இருப்பதால் தளர்ந்த இதயத்திற்கு சோர்வடைந்த உடலுக்கு சோயாவின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. 

சுவையான ஒரு இயற்கையான ஆன்டி - ஆக்ஸிடன்ட், மினரல்கள் சோயாவில் அதிகமாக உள்ளது இதனால் சுவையா பற்களுக்கும் எலும்புகளுக்கும் பாதுகாப்பு வழங்கும். 
இது தவிர சோயாவில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். சரி இனி மீல் மேக்கர் பயன்படுத்தி டேஸ்டியான மீல் மேக்கர் கோலா செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானவை 

மீல் மேக்கர் - 100 கிராம் 

சின்ன வெங்காயம் - 10 

தேங்காய்த் துருவல் - 1/2 கப் 

பட்டை, சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன் 

பொட்டுக் கடலை - 1 கப் 

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் 

பொடியாக நறுக்கிய பச்சைக் கொத்து மல்லி - 2 டேபிள் ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு 
பாதம் மரத்துபோனால் எந்த நோயின் அறிகுறி?
செய்முறை :
டேஸ்டியான மீல் மேக்கர் கோலா செய்வது எப்படி?
2 கப் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து அதில் மீல் மேக்கரைப் போட்டு ஊற வைக்கவும். அரை மணி நேரம் கழித்து தண்ணீரைப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். 

பொட்டுக் கடலையை மிக்சியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெங்காயத்தை வதக்கவும். வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும். 

வெங்காயம்- தேங்காய் வதக்கல் ஆறியதும் மிக்சியில் போட்டு அரைக்கவும். தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். அடுத்து தனியாக மீல் மேக்கரை நறுக்கி மிக்சியில் போட்டு அரைக்கவும். 

அரைத்த மீல் மேக்கர், அரைத்த தேங்காய் விழுது, சோம்புப்பொடி, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக பொட்டுக் கடலை மாவு சேர்த்து, கொத்தமல்லி சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். 
HIV தொற்றின் அடிப்படை அறிகுறிகள் யாவை?
மாவை சிறு சிறு கோலா உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கோலா உருண்டை களைப் போட்டு பொரித்து எடுக்கவும். குறிப்பு 
பொரிக்கும் போது அதிக தீயில் பொரிக்க வேண்டாம். மேல்பாகம் சிவந்து விடும். ஆனால் உள்வரை வேகாது. மீல்மேக்கர் கோலா, சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Tags: