அருமையான க்ரீன் இட்லி செய்வது எப்படி?





அருமையான க்ரீன் இட்லி செய்வது எப்படி?

புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது. புதினாவை துவையல் செய்து சாதத்துடன் சாப்பிட்டு வர வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, செரியாமை ஆகியன தீரும். 
க்ரீன் இட்லி செய்வது
குறிப்பாக புதினா இலைகள் அதன் புத்துணர்ச்சியூட்டும் நறுமணம் மற்றும் நல்ல சுவைக்காக பல உணவுகளில் கூடுதல் சேர்கையாக பயன்படுகிறது. 

கொத்தமல்லி விதையை நீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை ஆறவைத்து கண்களை கழுவினாலும், இதே பலன்கள் கிடைக்கும். 

கொத்தமல்லி இலைகளில் விட்டமின் ஏ, சி மற்றும் இரும்புச் சத்துக்கள் என ஏராளமான சத்துக்கள் உள்ளன. கொத்தமல்லி இலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. 

கொத்தமலை இலைகளை அரைத்து முகத்தில் பூசுவதால் தோல் சுருக்கம் நீங்கும். சரி இனி புதினா, கொத்தமல்லி பயன்படுத்தி அருமையான க்ரீன் இட்லி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

தேவையானவை:

குட்டி இட்லி – 20 (அல்லது )

பெரிய இட்லியை 4, 5 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளலாம், 

புதினா, கொத்தமல்லி – தலா ஒரு சிறு கட்டு, 

தேங்காய் துருவல் – அரை கப், 

புளி – சிறிதளவு, 

பச்சை மிளகாய் – 5 (அல்லது காரத்துக் கேற்ப), 

கடுகு – ஒரு டீஸ்பூன், 

பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், 

நெய் – ஒரு டேபிள் ஸ்பூன், 

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:

புதினா, கொத்த மல்லியை மண்போக அலசி, சுத்தம் செய்யவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து… புதினா, கொத்த மல்லி, புளி, தேங்காய் துருவல், 

உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, ஆற வைத்து, அரைத்துக் கொள்ளவும். நெய்யை காய வைத்து, கடுகு, பெருங்காயத் தூள் தாளித்து… அரைத்து வைத்த சட்னி, குட்டி இட்லிகளைப் போட்டுக் கிளறி இறக்கவும்.
Tags: