வெஜ் இறால் ஸ்ப்ரிங் ரோல் செய்முறை / Vej Shrimp Spring Roll !





வெஜ் இறால் ஸ்ப்ரிங் ரோல் செய்முறை / Vej Shrimp Spring Roll !

தேவையான பொருள்கள் :

கேரட், பீன்ஸ், பட்டாணிக் கடலை - ஒரு கப்

நறுக்கிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய்

இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய இறால் - 6 (அரைக்க வேண்டாம்)

உப்பு - 3/4 தேக்கரண்டி

ஸ்ப்ரிங் ரோல் ஷீட்ஸ் - சுமார் 15 - 20 ஷீட்

நறுக்கிய கொத்தமல்லி இலை - சிறிதளவு

கறிவேப்பிலை - 2 கொத்து

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு 

செய்முறை : 

வெஜ் இறால் ஸ்ப்ரிங் ரோல்

கேரட், பீன்ஸ், பட்டாணிக்கடலை இவை மூன்றையும் பொடியாக நறுக்கி வேக வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து

மேலும் வதக்கி காய்கறிகள், நறுக்கிய இறால் சேர்த்து கிளறி 10 நிமிடம் குறைந்த தீயில் உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.

வெந்ததும் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி சூடாற விடவும்.

இதனை ஸ்ப்ரிங் ரோல் ஷீட்டுகளில் 2 தேக்கரண்டி வைத்து மடக்கி இரு புறமும் உள்ளிழுத்து சுருட்டி பொரிக்கவும்.
Tags: