நாட்டுகோழி மிளகு வறுவல் செய்வது எப்படி?





நாட்டுகோழி மிளகு வறுவல் செய்வது எப்படி?

எலும்புகளை ஆரோக்கியமாக்கும் நாட்டுக்கோழி இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும்.
நாட்டுகோழி மிளகு வறுவல்
அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். நம்மூரில் நாட்டுக்கோழி தீமை என்று கூறுபவர் அதிகம். 

நாட்டுக் கோழியில் உள்ள B வைட்டமின்கள் கண்புரை மற்றும் தோல் கோளாறுகளைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பலவீனத்தை நீக்கவும், செரிமானத்தை மேன்படுத்தவும், 

நரம்பு மண்டலத்தை மேம்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும். ஒற்றைத் தலைவலி, இதயக் கோளாறுகள், நரை முடி, அதிக கொழுப்பு மற்றும் நீரிழிவு நோயைத் தடுக்கவும் அவை உதவியாக இருக்கும். 
சிக்கனில் உள்ள வைட்டமின் D கால்சியம் உறிஞ்சுதலை அதிகப்படுத்தும், அதனால் எலும்பு வலுப்பெரும். வைட்டமின் A கண்பார்வையை மேன்படுத்தும் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் ஹீமோகுளோபின் உருவாக்க உதவும். 

மேலும் தசை செயல்பாடு மற்றும் இரத்த சோகையை அகற்ற உதவுகின்றன.

நாட்டுக்கோழி வாசம் மூக்கைத் துளைக்கும் என்பார்கள். அந்தளவிற்கு நாட்டுக்கோழி மிகவும் சுவையாக இருக்கும். சரி இன்று நாட்டுக்கோழி மிளகு வறுவல் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
நாட்டுகோழி – 1 கிலோ

சின்ன வெங்காயம் – 300 கிராம்.

இஞ்சி – 3 சிறிதளவு

மிளகு – 6 தேக்கரண்டி

சீரகம் – 4 தேக்கரண்டி

சோம்பு – 2 தேக்கரண்டி

கசகசா – 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 6

புதினா – சிறிதளவு

மல்லி தழை – சிறிதளவு

கறி வேப்பிலை – சிறிதளவு

தயிர் – 3 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு – 4 தேக்கரண்டி

நல்லெண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை
நாட்டுகோழிக்கறியை நன்கு கழுவி வைக்கவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டை நைசாக அரைக்கவும். மிளகு, சீரகம், சோம்பு, கசகசாவை வறுத்து அரைக்கவும்.

பிறகு, கோழிக்கறியை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, அதில் அரைத்த இஞ்சி, பூண்டு, மிளகு சீரகம், சோம்பு, கசகசா, தயிர், எலுமிச்சை சாறு, உப்பு போட்டு நன்கு பிசைந்து குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து, 6 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், போட்டு நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், ஊற வைத்திருக்கும் கோழி மசாலாவை போட்டு வதக்கவும். தீயை மிதமாக வைக்கவும். 5 நிமிடம் கழித்து தீயை சிம்மில் வைக்கவும். நீர் ஊற்ற வேண்டாம். கோழிக்கறி 15 நிமிடத்தில் வெந்து விடும். 

நல்ல வறுவல் வேண்டு மெனில் ஒரு 5-10 நிமிடம் அடுப்பில் வைத்திருக்க லாம். இறக்கி, மல்லி தூவி அலங்கரிக்கவும். பிரியாணி, சப்பாத்தி, தோசை எதனுடனும் சாப்பிடலாம். சுவையான நாட்டுகோழி மிளகு வறுவல் தயார்.
Tags: