அருமையான சாக்லேட் கேக் செய்வது எப்படி?





அருமையான சாக்லேட் கேக் செய்வது எப்படி?

பெண்களுக்கு பிடித்தமான விஷயங்களில் எப்போதுமே சாக்லேட்டிற்கு என தனி இடம் உண்டு. நம் வாழ்வில் கொண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்து கொள்ள சாக்லேட்டை விட வேறு என்ன வேண்டும். 
இது உங்கள் பசியை திருப்திப் படுத்துவது மட்டுமல்லாமல், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உற்ற நண்பனாகவும் இருக்கிறது.

சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு இவ்வளவு பிரச்சனை வருவது, அவர்கள் அதிகமாக எடுத்துக் கொள்கின்ற சர்க்கரையினால் தான். 

டார்க் சாக்லேட் இரும்புச்சத்து நிறைந்த ஆதாரங்களில் ஒன்று. மாதவிடாயின் போது பெண்களுக்கு தேவைப்படும் ஒரு முக்கிய சத்தாக இரும்புச்சத்து உள்ளது. 

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்த இழப்பு உங்களுக்கு இரும்புச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தாது, ஆனால் அது ஒரு விதமான சோம்பலை தரக்கூடும். 
எனவே மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரும்புச்சத்து இழப்பை குறைக்க டார்க் சாக்லேட் உதவுகிறது. 

இதனை உட்கொள்வதன் மூலமாக உடல் முழுவதும் ஆக்ஸிஜன் சீராக பாய்ந்து, சோம்பலை குறைத்து சுறுசுறுப்பாக்குகிறது. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவருக்கும் கேக் என்றால் மிகவும பிடிக்கும்.

அதிலும் புத்தாண்டு நெருங்கி வரும் நேரம் என்பதால் வீடுகளில அனைவரும் கேக் செய்வார்கள். சரி இந்த முறையில் சொக்லேட் கேக் செய்து பாருங்கள். மிக மிக சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்

கோதுமை - 1 3/4 கப்

கொக்கோ பவுடர் - 3/4 கப்

சர்க்கரை - 2 கப்

பேக்கிங் சோடா - அரை தேக்கரண்டி

பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி

உப்பு - அரை தேக்கரண்டி

முட்டை - 2

வெஜிடபிள் ஒயில் - அரை கப்

பால் - ஒரு கப்

வனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி

சுடு நீர் - ஒரு கப்

சொக்லேட் ஃப்ராஸ்ட்டிங் (Frosting) செய்ய:

கொக்கோ பவுடர் - 2/3 கப்
பவுடர்ட் சுகர் - 3 கப்

வெண்ணெய் - அரை கப்

வனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி

பால் - 1/3 கப்
செய்முறை

கேக் செய்ய தேவையானப் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். கேக் செய்ய தேவையான கோதுமை, கொக்கோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு எல்லாம் சேர்த்து சலித்து வைத்துக் கொள்ளவும்.

சாக்லேட் கேக்
அதனுடன் சர்க்கரை சேர்க்கவும். வேறு ஒரு பாத்திரத்தில் முட்டை, வெஜிடபிள் ஒயில், பால், வனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை மா கலவை யுடன் சேர்த்து கலக்கவும். 

இப்போது கொதிக்கும் சுடு நீர் சேர்த்து கொள்ளவும். கலவை தோசை மா பதத்தில்(நீர்க்க) இருக்க வேண்டும். கேக் கலவை தயார். கேக் ட்ரேயில் வெண்ணெய் தடவி, கோதுமை தூவி வைக்கவும். 

இந்த கேக் கலவையை, இரண்டு கேக் ட்ரேகளில் ஊற்றவும். அவனை 350 டிகிரி F க்கு முற்சூடு செய்யவும். பின்னர் 25 முதல் 30 நிமிடங்கள் பேக் செய்யவும். கேக்கின் மையத்தில் குத்தினால் டூத் பிக் கிளீனாக வர வேண்டும்.

பின் 10 நிமிடங்கள் கழித்து ட்ரேயிலிருந்து கேக்கை மெதுவாக வேறு ப்ளேட்டுக்கு மாற்றவும். இதை அப்படியே சர்வ் பண்ணலாம். விரும்பினால் ஃப்ராஸ்ட்டிங்கும் செய்து சர்வ் பண்ணலாம்.
சொக்லேட் ஃப்ராஸ்ட்டிங் செய்ய, ஒரு பாத்தி ரத்தில் கொக்கோ பவுடர் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் வெண்ணெயை உருக்கி ஊற்றிக் கொள்ளவும்.
இதனுடன் பவுடர்ட் சுகர், பால், வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு க்ரீம் பதத்தில் கலக்கவும். ஃப்ராஸ்டிங் செய்ய கேக் நன்கு ஆறி இருக்க வேண்டும்.

ஒரு ப்ளேட் அல்லது மைக்ரோவேவ் டர்ன் டேபிளில் ஒயில் பேப்பர் கொண்டு கவர் செய்து, அதில் கேக்கை வைத்து க்ரீம் பூசவும். அதன் மீது இன்னொரு கேக்கை வைத்து மீதியுள்ள க்ரீமை பூசவும். பக்க வாட்டிலும் க்ரீம் பூசவும்.

பின்னர் கேக்கை விரும்பிய வாறு அலங்கரித்து, கட் பண்ணலாம். பரிமாறும் போது கேக்கின் மேலே செர்ரி அல்லது வனிலா ப்ராஸ்டிங் வைத்து பரிமாறலாம். சுவையான டபுள் லேயர்ட் சொக்லேட் கேக் தயார்.
Tags: