முட்டைக் குழம்பு செய்து சாப்பிட ஆசையா. சரி இன்று உங்களுக்காக பட்டர் முட்டை மசாலா எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

பட்டர் முட்டை மசாலா
இது மிகவும் சுவையானது. அத்துடன் தயாரிப்பதும் இலகுவானது.

தேவையான பொருட்கள்

வேக வைத்த முட்டை-2

மசித்த உருளைக்கிழங்கு-1கப்

வேகவைத்த பட்டணி-1கப்

மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்

கொத்தமல்லித்தூள்-1டீஸ்பூன்

கரம் மசாலாதூள்-1/4 டீஸ்பூன்

தக்காளி-1

வெங்காயம்-1

செய்முறை

1.ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு, அரிந்த வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

2.குடை மிளகாய், வேகவைத்த பட்டாணி, மசித்த உருளைகிழங்கு ஆகியவற்றையும் போட்டு வணக்கவும்.

3.உப்பு, மிளகாய்த் தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், கரம்மசாலாதூள் சேர்க்கவும்.

4.இவற்றுடன் தக்காளியையும் சேர்த்து வணக்கவும். நன்றாக வணங்கியபிறகு வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டிப் போட்டு வணக்கவும். கொத்தமல்லி தூவி இறக்கவும்.