ருசியான பால் ரவா கேசரி செய்வது எப்படி?





ருசியான பால் ரவா கேசரி செய்வது எப்படி?

ரவையில் இருந்து தயாரிக்கப்படும் உணவு ஒருபுறம் மிகவும் சுவையாகத் இருந்தாலும், மற்றொரு புறம் அது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். 
பால் ரவா கேசரி
சிலர் காலை உணவுகளில் மட்டும் அல்ல இனிப்பு வகைகளில் கூட இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். கோதுமையில் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் உள்ளது. 

இது உடலின் சக்தியை அதிகரிக்க வல்லது. ரவை கோதுமை யிலிருந்து தயாரிக்கப் படுவதால் இது உடலின் சத்தியை அதிகரிக்க உதவுகிறது. அதனால் ரவையை கட்டாயமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

ரவையில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது, இதனால் உடலில் அதன் குறைபாட்டைத் தடுக்கும். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, அது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. 
பாலில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது என்பது உண்மைதான். ஆனால், அதற்காக வளரும் குழந்தைகளுக்குப் பாலை மட்டுமே உணவாகக் கொடுக்கக் கூடாது. 

பாலை அதிகமாகக் குடிக்கும் குழந்தைகள் மற்ற உணவுகளைச் சாப்பிட மறுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு மற்ற உணவுகளின் மூலம் கிடைக்கும் புரதம் மற்றும் இரும்புச்சத்து கிடைக்காமல் போகும். 

இதனால் அடிக்கடி சோர்வு, எதிர்ப்பு சக்தியின்மை, எதிலும் ஆர்வம் இன்றி இருத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். 
எனவே, தினமும் குழந்தைகளுக்குக் காலை 100 மில்லி, மாலை 100 மில்லி என்ற அளவில் பால் கொடுத்தால் போதுமானது. உங்கள் குழந்தை மாலையில் இனிப்பாக சாப்பிட ஏதேனும் கேட்டால், பால் மற்றும் ரவையைக் கொண்டு கேசரி செய்து கொடுங்கள்.

தேவையான பொருட்கள்:

ரவை - 1/2 கப் சர்க்கரை - 3/4 கப்

பால் - 2 கப்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

குங்குமப்பூ - சிறிது

முந்திரி - 10 உலர்

திராட்சை - 10
உடலில் ஏற்படும் வீக்கமும், அதன் தீர்வும் !
செய்முறை:

ஒரு வாணலி யை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந் ததும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிற மாக வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதே வாணலி யில் ரவையை சேர்த்து குறைவான தீயில் பொன்னிற மாக வறுத்து இறக்கி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்பு 1 டேபிள் ஸ்பூன் வெது வெதுப்பான பாலில் குங்குமப் பூவை சேர்த்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் பாலை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ரவையை மெதுவாக சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும். பின் அதில் குங்குமப்பூ பாலை சேர்த்து மிதமான தீயில், தொடர்ந்து 3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
ரவையா னது நன்கு வெந்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து தொடர்ந்து கை விடாமல் கிளறி, சற்று கெட்டியாகும் போது, அதில் நெய் சேர்த்து கிளறி விட வேண்டும்.

அடுத்து அதில் ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து கிளறி இறக்கி னால், பால் ரவா கேசரி ரெடி!
Tags: