சிக்கன் வடை செய்வது | Chicken Vadai !





சிக்கன் வடை செய்வது | Chicken Vadai !

தேவையான பொருட்கள் :
சிக்கன் (boneless ) - 300 கிராம்

சின்ன வெங்காயம் - 50 கிராம்

மிளகு தூள் - சிறிதளவு

கரம் மசாலா - 1 ஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது - அரை ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

பிரட் தூள் - 150 கிராம்

முட்டை - 1

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
சிக்கன் வடை

வெங்காய த்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். சிக்கனை நன்றாக கழுவி தண்ணீர் நன்றாக வடிந்த பின்னர் மிக்ஸ்யில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணியம்பாடி பிரியாணி செய்வது எப்படி? 
வெங்காய த்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திர த்தில் அரைத்த சிக்கனுடன், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, வெங் காயம்,

மிளகு தூள் மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்துக் கொண்டு வடையாக அல்லது உருண்டை களாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத் தில் முட்டையை உடைத்து அதில் உள்ள வெள்ளை கருவை மற்றும் ஊற்றி கொள்ளவும். ஒரு பிளேட்டில் ரஸ்க் தூளை வைத்து கொள் ளவும்.

ஒரு தாச்சியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டி வைத்த உருண்டை களை முட்டை யில் பிராட்டிய பின்பு

அதை பிரட் தூளில் போட்டு பிரட்டி எடுத்து எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும். இப்போது சுவை யான சிக்கன் வடை ரெடி.
Tags: