எக்லஸ் கேரட் புட்டிங் செய்வது | Eklas Carrot Pudding !





எக்லஸ் கேரட் புட்டிங் செய்வது | Eklas Carrot Pudding !

தேவையானவை:

கேரட் - 200 கிராம் (துருவியது)

கோதுமை மாவு - ஒரு கப்

மைதா மாவு - ஒரு கப் + 1 டேபிள் ஸ்பூன் (தூவ)

ஆப்ப சோடா - முக்கால் டீஸ்பூன்

மசாலா பவுடர் - அரை டீஸ்பூன்
தேன் - கால் கப்

பால் - அரை கப்

உருக்கிய வனஸ்பதி - முக்கால் கப்

பொடித்த வெல்லம் - ஒரு கப்

மசாலா பவுடர் செய்ய:

கிராம்பு - 1

லவங்கப் பட்டை - ஒரு சிறு துண்டு

ஜாதிபத்ரி - சிறிதளவு

(இவற்றை எண்ணெய் விடாமல் வெறும் வாணலி யில் வறுத்துப் பொடிக் கவும்.)

செய்முறை:

வெல்ல த்தைக் கரைத்து வடி கட்டவும். ஒரு பாத்திர த்தில் தேன், பால், வனஸ்பதி சேர்த்து ஒரு கொதி வந்ததும், இறக்கி, வெல்லக் கரைச லில் சேர்க்கவும். மசாலா பவுடர் 
எக்லஸ் கேரட் புட்டிங்
மற்றும் தேவையா னவற்றில் உள்ள மற்ற பொருட்க ளையும் இந்தக் கலவை யில் சேர்த்துக் கலக்கவும். நடுவில் குழிவான (படம் பார்க்க) வட்ட வடிவ அலுமினி யம் மோல்டில் வெண்ணெய் தடவி, மைதா மாவு சிறிது தூவி விடவும்.
இதில் கலந்த கலவையை ஊற்றவும். குக்கர் பாத்திர த்தின் உள்ளே தட்டு வைத்து, அதன் மேல் 3 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும், 

அலுமினியம் மோல்டை இதன் உள்ளே வைக்கவும். குக்கர் பாத் திரத்தை அலுமி னியம் ஃபாயிலால் மூடவும். இல்லை யென்றால், புட்டிங் சொத சொதவென ஆகி விடும். 

இதற்கு ஒரு சரியான மூடியால், தண்ணீர் உள்ளே போகாத வாறு மூடி விடவும். சரியாக ஒரு மணி நேரம் பிறகு குக்கர் தானாகவே கீப் வார்ம் மோடுக்கு வந்து விடும். பிறகு எடுத்து துண் டுகள் போடவும்.
Tags: