சுவையான பெப்பர் சில்லி சிக்கன் செய்வது எப்படி?





சுவையான பெப்பர் சில்லி சிக்கன் செய்வது எப்படி?

சளி, இருமல் வந்து விட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டு விடலாம். தண்ணீரை சூடாக்கித் தான் குடிக்க வேண்டும்.  
சுவையான பெப்பர் சில்லி சிக்கன் செய்வது எப்படி?
வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும். 

நான்கு பூண்டு பல்லுடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து, சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். பூண்டை நன்றாக  நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். 

சளி, இருமலை இயற்கை வழியில் நீக்கும். கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு டீ குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும். 
ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக் கொள்ளவும். இதை அப்படியே மூடி வைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம்.  

சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும். பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருட்கள் உள்ளன.  

பொதுவாகவே, சளி போன்ற பாதிப்புகள் இல்லாத நாள்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும்.
சளி, இருமல் மற்றும் உடல் வலி இருப்பவர்கள் காரமான பிளாக் பெப்பர் சில்லி சிக்கன் சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும். ரொட்டி, சாதம் அல்லது இட்லி, தோசை ஆகியவற்றுடன் பெப்பர் சில்லி சிக்கன் சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/4கிலோ

முட்டை - 1

கான்ப்ளவர் - 1 ஸ்பூன்

தயிர் - 1/4 கப்

இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
மஞ்சள்த் தூள் - 1/2 ஸ்பூன்

மிளகுத்தூள் - 3ஸ்பூன்

பச்சமிளகாய் - 3

கரம் மசாலாத் தூள் - 1/2ஸ்பூன்

ரெட்கலர், உப்பு - தேவைக்கு

நீளமாக அறிந்த வெங்காயம் - 1

மிளகு த்தூள் - 1ஸ்பூன்

நறுக்கிய பச்ச மிளகாய் - 1

எண்ணெய், மல்லி இலை - தேவையான அளவு
அப்பன்டிசைடிஸ் என்பது கல் அடைப்பது அல்ல !
செய்முறை:
பெப்பர் சில்லி சிக்கன்
சிக்கன், முட்டை, கான்ப்ளவர், தயிர், இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகுத் தூள், பச்ச மிளகாய், கரம் மசாலாத் தூள், ரெட்கலர், உப்பு இவை அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்றாக மிக்ஸ் செய்து 1 மணி நேரம் நன்றாக ஊற விடவும். 

எண்ணெய் நன்றாக சூடு ஆன பின்பு ஊற வைத்த சிக்கனை பொறித்து தனியாக எடுத்து வைக்கவும்.
சொரியாசிஸ் - தவிர்க்க வேண்டியவை !
பொறித்த எண்ணெயில் வெங்காயம் போட்டு பொறிக்கவும். அதனை தனியாக எடுத்து வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பொறித்த சிக்கன், மற்றும் மிளகு, பச்ச மிளகாய், கொத்த மல்லி போட்டு வதக்கவும். 

அதன் மேலே பொறித்த வெங்காயம் போட்டு கிளறி இறக்கவும். சுவையான சுவையான பெப்பர் சில்லி சிக்கன் ரெடி.
Tags: