செட்டிநாடு சிக்கன் மிளகு வறுவல் செய்வது எப்படி?





செட்டிநாடு சிக்கன் மிளகு வறுவல் செய்வது எப்படி?

அசைவம் பலருக்கும் பிடிக்கும். அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் அசைவ உணவுகளில் ஒன்று சிக்கன். சிக்கன், மட்டன், மீன் எனப்பல வகைகளை ருசியாக செய்து சாப்பிடுவோம். 
செட்டிநாடு சிக்கன் மிளகு வறுவல் செய்வது எப்படி?
இதில் செட்டிநாடு ஸ்பெஷல் என்றால் சொல்லவே வேண்டாம். சுவை அள்ளும். சிக்கனை எப்படி செய்து கொடுத்தாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 

அதிலும் தற்போதைய காலத்தில் சிக்கனை கொண்டு விதவிதமாக புதிய உணவுகளை செய்து அசத்தி வருகிறார்கள். ஆனால் சிக்கனை கொண்டு செய்யப்படும் பல பாரம்பரிய உணவு வகைகளும் உள்ளன. 
வெயில் கால தலைவலிக்கு காரணங்கள் !
அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போகும் ரெசிபியானது சிக்கன் மிளகு வறுவல் ஆகும். 

மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து பாரம்பரியமான முறையில் எவ்வாறு காரசாரமான செட்டிநாடு சிக்கன் மிளகு வறுவல் செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் - அரை கிலோ

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

மல்லித் தூள் - 1 ஸ்பூன்

மிளகுத் தூள் -2 ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

தாளிப்பதற்கு.
பட்டை - சிறு துண்டு

பிரியாணி இலை -1

சோம்பு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது
விண்வெளி பயணம் உயிருக்கு ஆபத்தானதா?
செய்முறை:
செட்டிநாடு சிக்கன் மிளகு வறுவல்
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். சிக்கனை நன்கு கழுவி, அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள்

மற்றும் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து நன்கு பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.
பின்னர் கடாயை அடுப்பில் வைத்து, அதில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,

தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் மீதி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி, மல்லித் தூள் சேர்த்து நன்கு பிரட்டி பின் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
அதனுடன் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி,

சிறிது உப்பு சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து கடாயை மூடி போட்டு 15 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.

சிக்கன் நன்கு வெந்ததும், அதில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளரி இறக்கி, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, கொத்த மல்லியைத் தூவி இறக்கவும்.

சுவையான செட்டிநாடு சிக்கன் மிளகு வறுவல் ரெடி
Tags: