ஆப்பிள் பேரீச்சம்பழ கீர் செய்வது | Apple dates kheer !





ஆப்பிள் பேரீச்சம்பழ கீர் செய்வது | Apple dates kheer !

பண்டிகை கள் என்றாலே முக்கிய இடம் பிடிப்பது உணவுகள் தானே? கேக்குகள் மற்றும் இனிப்புகள் இல்லாத கிறிஸ்துமஸ் அல்லது நெய் லட்டும் பர்பியும் இல்லாத தீபாவளி எங்காவது உண்டா? 
ஆப்பிள் பேரீச்சம்பழ கீர்
இன்று உங்களுக்கு இந்த ஆப்பிள் பேரீச்சை கீர் பற்றி சொல்லப் போகிறோம். இதை செய்வதும் எளிது அதே நேரம் துர்கைக்கும் படைக்க முடியும். எனவே செய்யும் முறை மற்றும் தேவை யான பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் : முக்கால் கப் (பொடியாக தோலுடன் நறுக்கியது)

சர்க்கரை : ஒரு தேக்கரண்டி

தண்ணீர் : ஒரு கப்

கொழுப்பு நீக்கிய பால்: ஒரு கப்

சோளமாவு: 2 தேக்கரண்டி

பேரீச்சம்பழம்: கால் கப் பொடியாக நறுக்கியது

இனிப்பூட்டி : 2 தேக்கரண்டி

வால்நட் : பொடியாக நறுக்கியது சிறிதளவு

தேவையான பொருட்கள்:

ஆழமான நான்ஸ்டிக் வாணலி யில் ஆப்பிளை போட்டு அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். சில நிமிடங்கள் ஆப்பிளை வேக விடவும். பழம் என்பதால் சீக்கிரமே வெந்து விடும். நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய தில்லை.

சற்று மென்மையாக 5-7 நிமிடங்கள் வேகவிட்டு மசிந்து விடாமல் கிளறி சற்று கடிக்கும் பதத்தில் இறக்கி விடவும். இந்த பதம் சுவையைக் கூட்டும். இப்போது மற்றொரு நான்ஸ்டிக் வாணலி யில் அரை கப் பாலை ஊற்றிக் காய்ச்சி இறக்கி ஆற விடவும்.

அது ஆறியவுடன் அதில் சோளமாவை சேர்த்துக் கரைக் கவும். வழக்க மாக கீர் செய்யும்போது செய்வதைப் போல் பாலை கொதிக்க விட வேண்டிய தில்லை. ஒரு கொதி வந்தவுடன் அதில் சோள மாவை சேர்த்துக் கலக்க வேண்டும்.

கட்டிகள் வராத வண்ணம் நன்றாகக் கிளற வேண்டும். அடுத்து அதில் பேரீச்சம் பழத்தைப் போட்டு நன்றாக கிளறவும்.
பேரீச்சம் பழத்தை நன்றாகக் கடைந்து விட்டால் அதன் மணமும சுவையும் பாலில் கலந்து விடும். மிதமான சூட்டில் 10 நிமிடங் களுக்கு இடை விடாது கிளறவும். இப்போது நெருப்பை அணைத்து கீர் நன்றாக ஆறும் வரை விடவும். 

பின்னர் இதை ஒரு கிண்ண த்தில் எடுத்து ஆப்பிளை சேரத்து இனிப் பூட்டியை யும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின்னர் அதை ஒரு அழகான கிண்ண த்தில் ஊற்றி மேலே வால்நட் துகள் களைத் தூவவும் இதனை குளிரூட்டி பரிமாறி னால் சுவை சிறப்பாக இருக்கும் இதோ பேரீச்சம் பழம் ஆப்பிள் கீர் செய்ய நீங்கள் தயார். 

உங்கள் உறவினர் அல்லது நண்பர்க ளுக்கு சுகர் இருந்தா லும் தயக்க மின்றி இதை பருகலாம்.
Tags: