இத்தாலியன் ஹாட் சாக்லேட் | Italian hot chocolate !





இத்தாலியன் ஹாட் சாக்லேட் | Italian hot chocolate !

உங்களுக்கு இத்தாலியன் ஹாட் சாக்லேட் ரொம்ப பிடிக்குமா? இதைக் குடிக்கவே அடிக்கடி காபி ஷாப் செல்வீர்களா? இனிமேல் கவலை வேண்டாம். ஏனெனில் இந்த இத்தாலியன் ஹாட் சாக்லேட்டை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்.
இத்தாலியன் ஹாட் சாக்லேட்

மேலும் இதை செய்வதற்கு 10 நிமிடம் போதும். சரி, இப்போது அந்த இத்தாலியன் ஹாட் சாக்லேட் பானத்தை எப்படி வீட்டிலேயே செய்வதென்று பார்ப்போம். 

அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பால் - 1 1/2 கப்

சோள மாவு - 1/2 டீஸ்பூன்

சாக்கோ சிப்ஸ் - 3 டேபிள் ஸ்பூன்

தேன் - 1 டீஸ்பூன்

சர்க்கரை - 1 டீஸ்பூன்

கொக்கோ பவுடர் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் பாலில் சோள மாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு வாணலியில் ஊற்றி சூடேற்றி, 

அத்துடன் சாக்கோ சிப்ஸ் மற்றும் தேன் சேர்த்து, குறைவான தீயில் தொடர்ந்து கிளறி விட வேண்டும். 

சாக்கோ சிப்ஸ் முற்றிலும் கரைந்ததும், அதில் சாக்கோ பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், இத்தாலியன் ஹாட் சாக்லேட் ரெடி.

குறிப்பு:

வேண்டுமானால் இந்த ஹாட் சாக்லேட்டுடன் 1/4 டீஸ்பூன் வென்னிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம். 

இதில் சேர்க்கப்பட்டுள்ள சோள மாவு, இந்த பானத்தை கெட்டித்தன்மைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. 

உங்களுக்கு ஹாட் சாக்லேட் சற்று கெட்டியாக வேண்டுமானால், சற்று அதிகமாக சோள மாவை சேர்த்துக் கொள்ளலாம். * இந்த ஹாட் சாக்லேட் பானத்தை முழுமையாக குறைவான தீயில் செய்யுங்கள்.
Tags: